ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு, புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்! - Seithipunal
Seithipunal


ஆவணி மாத மூண்டாவது ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

தஞ்சை அடுத்த புன்னைநல்லூரில் உலக புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு அம்மனை தரிசனத்திற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள்  வருவார்கள்.

இந்த கோவிலில் ஆவணி மாதங்களில் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் பக்தர்களின் கூட்டம் அலை மோதும். கடந்த ஞாயிற்றுக்கிழமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.

இன்று ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் நடந்தே கோவிலுக்கு வந்தனர். அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பாதுகாப்பில் இருந்த காவல்துறையினர் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினர்.

அம்மன் சன்னதியில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
பக்தர்கள் பலர் முடி காணிக்கை, மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான நேர்த்திக்கடன் செலுத்தினர். கூட்டம் அதிகரித்து வருவதால் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees gathered at Punnainallur Mariamman Temple


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->