சபரிமலையில் திணறும் போலீசார் - காரணம் என்ன?
devotees increase in sabarimalai temple
சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகர விளக்கு மற்றும் மண்டலபூஜைக்காக கடந்த மாதம் 16-ந் தேதி நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல், ஆன்லைன் முன்பதிவு தவிர நிலக்கல்லில் உடனடி முன்பதிவும் நடைபெற்று வருவதால் சபரிமலையில் நாள் ஒன்றுக்கு 1 லட்சத்திற்கும் மேல் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
இதனால், தரிசன நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது அளவற்ற கூட்டத்தால் இருமுடி கட்டிய பக்தர்கள், அய்யப்பன் வளர்ந்த இடமான பந்தள அரண்மனையில் உள்ள வலியக்கோயில் அய்யப்பனை தரிசனம் செய்து, அங்கு தாங்கள் கொண்டு வந்த இருமுடியை உடைத்து நெய் அபிஷேகம் செய்துவிட்டு, ஊர் திரும்புகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/sabarimalai.jpg)
மேலும், பம்பை, நிலக்கல், எரிமேலி, பத்தனம்திட்டா உள்ளிட்ட இடங்களில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பதும், பதினெட்டாம் படியில் ஏற நான்கு மணி நேரம் காத்திருக்கும் சூழலும் நிலவுவதாகவும் பல சிக்கல்கள் எழுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதற்கிடையே பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என்பதால், நிலக்கல்லில் நடந்து வரும் உடனடி தரிசன முன்பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க தேவஸ்தானத்திற்கு பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
devotees increase in sabarimalai temple