இந்த பொருட்களை பரிசாகக் கொடுத்தால் அதிர்ஷ்டம் போய்விடுமா? பரிசளிக்கும் முன் தெரிந்து கொள்ள வேண்டியவை.! - Seithipunal
Seithipunal


நாம் ஒருவர்மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் விதமாகவே ஒருவருக்கொருவர் பரிசுகளை கொடுத்துக்கொள்கிறோம். பிறருக்கு பரிசுகளைக் கொடுப்பதும், பிறரிடம் இருந்து பரிசுப்பொருட்களை வாங்குவதும் மிகப்பெரிய சந்தோஷம். மற்றவருக்கு மனம் நிறைந்து பாசமுடன் கொடுக்கும் ஒவ்வொரு அன்பளிப்பும் விலைமதிப்பில்லாதது.

ஆனால் மற்றவர்களுக்கு ஒரு சில பொருட்களை தரக்கூடாது, அவ்வாறு சில பொருட்களை பரிசாக கொடுப்பதால், கொடுப்பவருக்கும் வாங்குபவருக்கும் தீமைகளை விளைவிக்கும். மற்றவர்களுக்கு எந்தெந்த பரிசுகளைத் தரலாம், தரக்கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

மண்ணால் ஆன பொருட்கள் :

இயற்கையாக பூமியிலிருந்து கிடைக்கும் பொருட்களைப் பரிசாக வழங்கலாம். மண்ணால் ஆன பொருட்களை பரிசாக கொடுப்பதால், பரிசு கொடுப்பவரின் வாழ்நாள் மற்றும் பணப்புழக்கத்தை அதிகரிக்க செய்யும். எனவே மண்ணால் செய்த அழகிய சிலைகள், பூந்தொட்டிகள் போன்றவற்றை பரிசாக தரலாம்.

யானை பொம்மை :

ஜோடியாக உள்ள யானை பொம்மைகளைப் பரிசாகக் கொடுக்கலாம். வெள்ளியால் ஆன ஜோடி யானை பொம்மைகள், தங்கம் பூசப்பட்ட ஜோடி யானை பொம்மைகள், வெங்கலத்தாலான ஜோடி யானை பொம்மைகள், மரத்தால் செய்யப்பட்ட ஜோடி யானை பொம்மைகள் ஆகியவற்றை பரிசாக தரலாம். ஜோடியாக உள்ள யானை பொம்மைகளை பரிசாக கொடுப்பது மிகவும் சிறந்தது.

வெள்ளி :

வெள்ளி பொருட்களை பரிசாக கொடுப்பது மிக சிறந்தது. வெள்ளி பொருட்கள் லட்சுமியை குறிப்பதாகும்.

துண்டுகள் மற்றும் கைக்குட்டை :

துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளை நிறையப்பேர் அதிகம் பரிசாகக் கொடுக்கிறார்கள். ஆனால் துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளை அன்பளிப்பாக தரக்கூடாது. துண்டுகள் மற்றும் கைக்குட்டைகளைப் பரிசாகக் கொடுப்பது, கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் தீமையை உண்டாக்கும்.

கடிகாரங்கள் :

பெரும்பாலானோர் கடிகாரங்களை பரிசாக தருவதை பழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் கடிகாரத்தை பரிசாக தருவது எதிர்மறை எண்ணங்களை அளித்து வாழ்நாளை குறைத்துவிடும். ஆகையால் கடிகாரங்களை மற்றவர்களுக்கு பரிசாகக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். 

கூர்மையான ஆயுதங்கள் :

கூர்மையான கத்தி போன்ற ஆயுதங்களை பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்கக்கூடாது. ஏனெனில், கூர்மையான ஆயுதங்களைப் பரிசுப் பொருளாகத் தருவது, கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் கெடுதலை உண்டாக்குமாம்.

தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் :

தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்களை பரிசாகக் கொடுப்பது என்பது உங்களின் அதிர்ஷ்டத்தை மற்றவர்களுக்கு தருவது போன்றதாகும். மீன் தொட்டிகள், தண்ணீர் சம்பந்தப்பட்ட பொருட்களைப் பரிசாகத் தரக்கூடாது.

காலணிகள் :

காலணிகளை பரிசாகத் தருவது மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும். ஷீக்களை கூட பரிசாக வழங்கக்கூடாது.

வேலை சம்பந்தமான பொருட்கள் :

நீங்கள் என்ன வேலை செய்கிறீர்களோ, அது சம்பந்தமான பொருட்களை பரிசாக கொடுப்பது உங்களின் வேலை திறனை குறைக்குமாம். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு எழுத்தாளராக இருந்தால் பேனா, புத்தகம் போன்றவற்றை பரிசாக கொடுக்கக்கூடாது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dont Gift these Things To others


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->