உங்கள் உடலில் 'எந்த இடத்தில்' பல்லி விழுகிறது என்று கவனியுங்கள்.. அதற்கான பலன்களை தெரிந்து கொள்வோம்..!! - Seithipunal
Seithipunal



எல்லோர் வீடுகளிலும் பல்லியும் ஒரு அங்கமாக சுவற்றில் ஒட்டிக் கொண்டிருக்கும். சில நேரம் தரையில் கூட ஊர்ந்து செல்லும். மேலும் சில நேரங்களில் நாம் எதிர்பாராத போது நம் மேலேயே கூட விழுந்து விடும். பல்லி விழுந்தால் உடனேயே குளிக்க வேண்டும். பிள்ளையாரை வணங்க வேண்டும். அசுபம் என்று பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. 

இந்தப் பதிவில் ஆண், பெண் இருபாலருக்கும் பல்லி எங்கு விழுந்தால் என்ன பலன் என்று காண்போம். 

* ஒருவரது இடது கையில் விழுந்தாலோ, அல்லது கை விரல்களை உரசிச் சென்றாலோ மன உளைச்சல் ஏற்படும். 

* தலையில் பல்லி விழுந்தால், அவர் பணக்காரராக இருந்தால் ஏழையாகவும், ஏழையாக இருந்தால் அவர் பணக்காரராகப் போகிறார் என்றும் அர்த்தம். 

* அதுவே நோய்வாய்ப்பட்ட ஒருவர் மீது பல்லி விழுந்தால் அவருக்கு விரைவில் மரணம் என்று அர்த்தம். 

* வலது காதில் விழுந்தால் நீண்ட ஆயுள், இடது காதில் விழுந்தால் ஆதாயம் ஏற்படும். 

* உதட்டிற்கு மேல் பல்லி விழுந்தால் செல்வம் பறி போகும். உதட்டிற்கு கீழ் விழுந்தால் செல்வம் பெருகும்.

* தொடையில் பல்லி விழுந்தால் எதிரிகளை வீழ்த்துவதோடு, பல்வேறு நன்மைகளும் ஏற்படும். 

* கணுக்கால் மற்றும் பாதங்களுக்கிடையே பல்லி விழுந்தால் வாழ்க்கைத்துணையுடன் பிரிவு ஏற்படும். 

* இரண்டு முன்னங்கால்களுக்கிடையே பல்லி விழுந்தால் வாகனம் வாங்க வாய்ப்பு அமையும். 

* இதயப் பகுதியின் மேல் பல்லி விழுந்தால் மரணத்தை தரும் துன்பத்தை அனுபவிக்கப் போகிறார் என்று அர்த்தம். 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Effects of Lizard Falling On Your Body Parts


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->