ஈஷாவில் மகா சிவராத்திரி அன்று வரலாற்றில் முதல் முறையாக நள்ளிரவில் நடைபெறவுள்ள நிகழ்வு..! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டு மக சிவராத்திரி விழா எதிர்வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் கோவை ஈஷா யோக மையத்தில் வரும் 26- ஆம் தேதி மாலை 06 மணி முதல் காலை 06 மணி வரை மகா சிவராத்திரி விழா நடைபெறுகிறது. 

இவ் விழாவில் சத்குரு வழங்கும் தியானங்கள் மற்றும் பிரபல கலைஞர்களின் இன்னிசை நிகழ்ச்சிகள், பாரம்பரிய கலை மற்றும் தற்காப்பு கலை நிகழ்ச்சிகள், ஆதியோகி திவ்ய தரிசனம் என இரவு முழுவதும் கோலாகலமாக விழா கொண்டாடப்படும்.

இந்த ஆண்டு முதன்முறையாக, சக்திவாய்ந்த மஹாமந்திர தீட்சையை சத்குரு நள்ளிரவில் அனைவருக்கும் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. தீட்சை பெற்ற பின் தினமும் வீட்டில் மந்திரத்தை உச்சாடனம் செய்து, மகத்தான பலன்களை பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், சத்குருவின் வழிகாட்டும் தீவிரமிக்க தியானங்களும், அருளுருரைகளும் ஓர் ஆழமான ஆன்மிக அனுபவத்தை உணர்வதற்கான சிறந்த சூழலை உருவாக்குகிறது என்றும் ஈஷா யோக மையம் கூறியுள்ளது. எதிர்வரும் 23-ஆம் தேதியில் இருந்து 25-ம் தேதி வரை மகா சிவராத்திரி விழாவின் முன்னோட்டமாக புகழ்பெற்ற கலைஞர்களின் இந்திய பாரம்பரிய இசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளின் திருவிழா நடைபெற உள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

For the first time in history the event will be held at midnight on Maha Shivaratri at Isha


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->