த.வெ.க தலைவர் விஜய் வீட்டில் செருப்பை வீசிய நபர் - சென்னையில் பரபரப்பு.!
man throw cheppal to tvk leader vijay house
தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்றக் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். இந்தக் கட்சி தொடங்கி தற்போது இரண்டாம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது. இரண்டாம் ஆண்டு தொடக்க விழா, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில் இன்று நடைபெறுகிறது.
இந்த விழாவில் தவெகவை சேர்ந்த மூன்று ஆயிரம் நிர்வாகிகள் பங்கேற்கவுள்ளனர். அவர்களுக்கு சிறப்பு அனுமதிச்சீட்டு வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த தொடக்க விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு தடபுடல் விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர் ஒருவர் திடீரென குழந்தையின் செருப்பை விஜய்யின் வீட்டிற்குள் வீசினார்.
அங்கிருந்த காவலாளிகள் அந்த நபரை அங்கிருந்து வெளியேற்றினர். பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் செருப்பை வீசிய நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
man throw cheppal to tvk leader vijay house