தமிழகத்தில் அனைத்து கட்சிக் கூட்டம் - எப்போது தெரியுமா?
coming 5th all party meeting in chennai
தமிழகத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எதிர்த்து இந்த கூட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மார்ச் 5-ம் தேதி நடைபெற உள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), இந்திய தேசிய காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மையம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஆதி தமிழர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை, மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மக்கள் விடுதலை கட்சி, அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்(அதிமுக), பாட்டாளி மக்கள் கட்சி(பாமக), தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்), தேசிய முற்போக்கு திராவிட கழகம்(தேமுதிக), அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்(அமமுக), பாரதிய ஜனதா கட்சி(பாஜக), தமிழக வெற்றிக் கழகம்(தவெக), நாம் தமிழர் கட்சி(நாதக)
புதிய தமிழகம், புரட்சி பாரதம் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி, மனிதநேய ஜனநாயகக் கட்சி, இந்திய சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, அனைத்து இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், பசும்பொன் தேசிய கழகம், அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி, கலப்பை மக்கள் இயக்கம், பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை, ஆம் ஆத்மி கட்சி, சமதா கட்சி, தமிழ்ப்புலிகள் கட்சி, கொங்கு இளைஞர் பேரவை, இந்திய குடியரசு கட்சி உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்கின்றனர்.
English Summary
coming 5th all party meeting in chennai