வைகுண்ட ஏகாதேசி : திருப்பதியில் சொர்க்கவாசல் திறப்பு.!  - Seithipunal
Seithipunal


இன்று வைகுண்ட ஏகாதேசியை முன்னிட்டு தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வீதியில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் தருவார்.

அந்தவகையில், திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. 

அதன் பிறகு உற்சவல் மலையப்ப சாமி ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேதாரக எழுந்தருளினார். சொர்க்கவாசல் திறப்பிற்காக கோவிலில் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். 

இந்த நிகழ்ச்சியில், கர்நாடக ஆளுநர், மராட்டிய முதலமைச்சர், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக ஏழுமலையான் கோவில் சுமார் நான்கு டன் மலர்களாலும் சரவிளக்குகளாலும் அலங்கரிக்கபப்ட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavens gate open in tirupati for vaikunda yegathesi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->