இழந்த செல்வத்தை மீட்டு..கடன் தொல்லையை நிவர்த்தி செய்யும் குபேர லட்சுமி.!
How to growth kubera Lakshmi
பணக்காரர் ஆக வேண்டும், மகாலட்சுமியின் அருள் வீட்டிற்குள் வர வேண்டும், குபேரன் அருள் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.
சிலர் கோடிகளுக்கு அதிபதிகளாக திகழ்கிறார்கள். பலர் லட்சங்களுக்கு சொந்தக்காரர்களாக வாழ்கிறார்கள். இன்னும் பலரின் நிலை அன்றாட தேவைகளை மட்டுமே நிறைவு செய்யும் வகையில் இருக்கிறது. இன்னும் சிலருக்கு அன்றாட தேவைகளுக்கே தடுமாறும் சூழ்நிலை இருந்து வருகிறது.
கோடி கோடியாய் செல்வம் பெருக வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் எப்படி பணக்காரர் ஆவது? குபேரனின் அருள் நமக்கு கிடைக்குமா? என்றும் ஏங்குகின்றனர். செல்வம் சேரும் இடத்தில்தான் சேரும். செல்வத்தை ஈர்க்க சில வழிகள் உள்ளன.
நம்முடைய வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்றால், நிச்சயம் குபேர லட்சுமி வழிபாடு அவசியம் தேவை.
சகல செல்வ கடாட்சங்களையும் தந்தருளக்கூடியவள் மகாலட்சுமி. அதேபோல், செல்வ வளம் வருவதை குபேர யோகம் வந்துவிட்டது என்று சொல்வார்கள். அதனால்தான் லட்சுமி கடாட்சம் தரும் குபேர லட்சுமி வழிபாடு மிக மிக உன்னதமானது.
குபேர லட்சுமி வழிபாட்டை செய்ய செய்ய, கடன் தொல்லையில் இருந்து நிவர்த்தி பெறலாம்.
வீட்டில் இதுவரை இருந்த கஷ்டங்களில் நிலையில் இருந்து மீளலாம். மேலும், வீட்டில் சுபிட்சம் நிலவும். பணவரவை அதிகரிக்க செய்யும். குபேர லட்சுமி வழிபாடு இழந்த செல்வத்தை மீட்டு தரும்.
English Summary
How to growth kubera Lakshmi