இன்று ஆடிப்பெருக்கு.. வீட்டிலேயே வழிபாடு செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி இந்த மாதத்தில் ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி பௌர்ணமி, ஆடித்தபசு, ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம் என மாதம் முழுவதும் பண்டிகைகளாக அமைவதால் ஆடி மாதம் மேலும் சிறப்பு பெறுகிறது.

அந்த வகையில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 18 ஆம் நாள் அன்று ஆடிப்பெருக்கு கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விவசாயிகள் ஆடி பட்டம் விதைக்கின்ற காலமாக ஆடி மாதம் அமைந்துள்ளது. அதன்படி விவசாயிகள் தங்களது வயல்களில் விதைகளை தூவி புதிய பயிரிடும் இந்த காலத்திற்கு தனி விசேஷங்கள் உண்டு.

ஆடிப்பெருக்கு தினத்தில் திருமணமாகாத இளம்பெண்கள் விரதம் இருந்து ஆற்றை வழிபட்டு வாழை மட்டையில் விளக்கேற்றி நீரில் விடுவார்கள். திருமணமான புது மணப்பெண்கள் தங்களது தாலி கயிற்றை மாற்றி புதிய தாலி கயிறு அணிவார்கள். தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் ஓகேனக்கல் முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா விமரிசியாக கொண்டாடப்படுகிறது.

ஆடி மாதத்தில் தான் தென்மேற்கு பருவ மழை வலுவடைந்து காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் புது வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும். அவ்வாறு ஆடியில் காவிரி வெள்ளம் பெருக்கெடுத்து வருவதை தான் மக்கள் ஆடிப்பெருக்கு என்று கொண்டாடி வருகின்றனர். காவிரி அன்னைக்கு சீர் செய்து வணங்குவது தான் இந்த வழக்கம்.

வீட்டில் இருந்தபடியே ஆடிப்பெருக்கு வழிபாடு செய்வது எப்படி?

வீட்டில் இருக்கும் பூஜை அறையில் காப்பரிசி செய்து கும்பிடலாம். மேலும் மஞ்சள் கயிற்றை வைத்தும் பூஜை செய்து வழிபடலாம். காப்பரிசி அனைத்து முக்கிய பூஜைகளிலும், பிரதோஷத்தில் நந்திக்கும், பொங்கல் விழாக்களில் படையலிலும், பெண்களின் வளைகாப்பு மற்றும் ஆடிப்பெருக்கு தினங்களில் முக்கிய நிவேதனமாக வைக்கப்படுகிறது. இதனை அன்றைய நாளில் சாப்பிடுபவர்களுக்கு நிறைய நன்மைகள் என்பது நம்பிக்கை.

ஆடிப்பெருக்கு தினத்தன்று பூஜை செய்து வணங்கினால் திருமணம் ஆகாதவருக்கு விரைவில் திருமணம் நடைபெறும். பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் இந்த தினத்தில் பிரதமிருந்து வழிபட்டால் திருமணம் கைகூடி வரும். மேலும் ஆடி பதினெட்டில் விரதம் இருந்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to pray Aadi 18 and special


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->