காகம் கரையும் திசையும் அதன் பலன்களும்..!!
kagam karaiyum palangal
காகம் கரையும் பலன்கள் :
கிழக்கு - அரசு அனுகூல காரியங்களில் ஜெயம் கிட்டும். காரிய சித்தி உண்டாகும்.
மேற்கு - தானிய விருத்தி மற்றும் கடலில் விளையும் பொருட்களான பவளம், முத்து போன்றவற்றின் சேர்க்கை உண்டாகும்.
வடக்கு - ஆடை சேர்க்கையும்இ காரியத் தடங்கல் மற்றும் நல்ல உணவு கிடைக்கும்.
தெற்கு - தானியங்களில் எதிர்பார்த்த லாபமும், சங்கீத துறையில் உள்ளோரின் நட்புகள் கிட்டும்.
தென்கிழக்கு - பொன் பொருட்சேர்க்கை உண்டாகும். பகைவர் விலகுவார்கள்.
தென்மேற்கு - சுப செய்திகள் கிட்டும்.
வடகிழக்கு - கால்நடைகளின் விருத்தி, பொருட்கள் களவு போதல் மற்றும் வாகனச் சேர்க்கை உண்டாகும்.
வடமேற்கு - ஆயுதங்கள் மற்றும் உலோகத்தால் ஆன பொருட்களால் தனவரவு உண்டாகும்.
பஞ்ச பட்சி :
பறவைகளுக்கு, பூமியில் ஏற்படும் பருவநிலை மாற்றங்கள் மற்றும் எதிர்காலம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளை யூகிக்கும் வல்லமை இயற்கையாகவே உள்ளன. இந்த எதிர்காலம் பற்றி முன்கூட்டியே அறியும் தன்மையால் நம் முன்னோர்கள் இவற்றை கொண்டு எதிர்காலத்தை கணிக்கும் சாஸ்திரத்தை உருவாக்கினார்கள். அந்த சாஸ்திரத்தின் பெயர் தான் 'பஞ்ச பட்சி' ஆகும்.
இந்த பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஐந்து பறவைகளை அடிப்படையாக கொண்டது. இதில் காகமும் ஒரு பட்சி ஆகும்.
காகம், சனி தேவரின் வாகனமாகவும், நம் முன்னோர்களாகவும் நமக்கு காட்சி அளிக்கிறது. பட்சி சாஸ்திரத்தில் உள்ள காகம், மனித வாழ்வில் நடைபெறும் சில மாற்றங்களை முன்கூட்டியே தெரிவிக்கிறது.