தினம் ஒரு திருத்தலம்... அகத்திய தீர்த்தம்... வஜ்ஜிர தீர்த்தம்... கைச்சின்னேஸ்வரர்.!! - Seithipunal
Seithipunal


அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் :

தினம் ஒரு திருத்தலம் பகுதியில் இன்று அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...

கோயில் எங்கு உள்ளது :

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கச்சனம் என்னும் ஊரில் அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயிலில் இறைவன் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார்.

இத்தலத்தில் சீனிவாசப் பெருமாள் சன்னதியும் இணைந்திருப்பது சிறப்பு.

அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயிலில் தட்சிணாமூர்த்தி, ரிஷபாரூட தட்சிணாமூர்த்தியாக பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

வேறென்ன சிறப்பு :

இத்தலத்தின் கோஷ்டத்தில் துர்க்கை, சரஸ்வதி, ஜேஷ்டாதேவி ஆகியோர் காட்சியளிக்கின்றனர். இவர்களை அடுத்து தனி சன்னதியில் மகாலட்சுமியும் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

இந்திரனின் கைவிரல்கள் லிங்கத்தில் பதிந்ததால், 'கைச்சின்னேஸ்வரர்" எனப்படும் இவர், பல்வளை நாயகி அம்பிகையுடன் இத்தலத்தில் உள்ளார்.

இத்தலத்தில் அகத்தியரால் ஏற்படுத்தப்பட்ட 'அகத்திய தீர்த்தமும்", கோயிலின் மதிலுக்கு வடபுறம் உள்ள 'வஜ்ஜிர தீர்த்தமும்" சிறப்பு வாய்ந்தது.

அர்த்தநாரீஸ்வரர் சன்னிதியும் இத்தலத்தில் உள்ளது.

திருவிழாக்கள் :

திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றது.

வைகாசி விசாகம், ஆனித்திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம் போன்ற தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றது.

பிரதோஷ நாட்களில் சுவாமி புறப்பாடு நடை பெறுகின்றது.

இத்தலத்தில் என்னென்ன பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

தவறு செய்தவர்கள் மனம் வருந்தி சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது பாவத்தை சிவன் மன்னித்து அருள்கிறார் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்கள் :

இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவி செய்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kaichinneswarar temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->