10 டன் வெள்ளி கட்டிகள் பறிமுதல் - மஹாராஷ்டிராவில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று ஒரே நாளில் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன. இதனை முன்னிட்டு மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

இந்த நிலையில், தேர்தல் நடைபெற்ற நாளான நேற்று மாநிலத்தின் துலே மாவட்டத்தில் உள்ள தால்னர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் வழக்கமான சோதனை மேற்கொண்டனர். 

அதில் நாக்பூர் நோக்கி சென்ற லாரியில் இருந்து சுமார் 10 டன் எடையுள்ள வெள்ளி கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வெள்ளி ஒரு வங்கிக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது. 

இதேபோல், கடந்த அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி முதல், மஹாராஷ்டிராவில் மாநில மற்றும் மத்திய அமைப்புகளின் அமலாக்க நடவடிக்கைகளில் ரூ.706.98 கோடி சொத்துக்களை பறிமுதல் செய்துள்ளன. இதில் சட்டவிரோத பணம், மதுபானம், போதைப்பொருள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்கள் அடங்கும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 ton silvar seized in maharastra


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->