கடன் தொல்லையில் இருந்து நிவர்த்தி தரும் குபேர லட்சுமி..!!
Kubera Lakshmi relieves money problems
பணவரவை அள்ளித்தரும் குபேர லட்சுமி..!!
உங்களுடைய வாழ்க்கை செல்வ செழிப்போடு இருக்க வேண்டும் என்றால், நிச்சயம் குபேர லட்சுமி வழிபாடு அவசியம். சகல செல்வ கடாட்சங்களையும் தந்தருளக்கூடியவள் மகாலட்சுமி. அதனால்தான் லட்சுமி கடாட்சம் தரும் குபேர லட்சுமி வழிபாடு மிக மிக உன்னதமானது.
ஒருவரது வீட்டில் செல்வம் பெருகவும், சேர்ந்த செல்வம் கரைந்திடாமல் காக்கவும் ஒருவர் செய்யவேண்டிய மிகச்சிறந்த பூஜை குபேர லட்சுமி பூஜையே. இதனால் கிடைக்கப்பெறும் பலன் மிக மிக பெரிது.
பூஜை செய்யும் முறை :
இப்பூஜையை ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் தொடர்ந்து ஒரே நாளில் செய்ய வேண்டும். ஒன்பது வாரம் பூஜை செய்ய நினைப்பவர்கள் வாரம்தோறும் வெள்ளிக்கிழமையன்று இப்பூஜையை செய்யலாம்.
அதேபோல் ஒன்பது மாதம் செய்ய நினைப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியன்று இப்பூஜையை செய்யலாம். இப்பூஜையை ஒருவர் மட்டுமே தொடர்ந்து செய்ய வேண்டும். அவரால் முடியாத பட்சத்தில் அதே குடும்பத்தை சேர்ந்த வேறொருவர் செய்யலாம்.
வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில், அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். பின்பு, பூஜை தடைபடாமல் இருக்க விநாயகரை வணங்கி ஆரம்பிக்கவும்.
இந்த பூஜையை செய்வதால் வீட்டில் நிச்சயம் பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் பெருகும். அதோடு வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைக்கும்.
குபேர லட்சுமி வழிபாட்டை செய்ய செய்ய,
கடன் தொல்லையில் இருந்து நிவர்த்தி பெறலாம்.
வீட்டில் இதுவரை இருந்த கஷ்டங்களில் இருந்து மீளலாம்.
மேலும், வீட்டில் சுபிட்சம் நிலவும்.
பணவரவை அதிகரிக்க செய்யும்.
English Summary
Kubera Lakshmi relieves money problems