கும்பகோணம் மாசி மக திருவிழா.!
Kumbakonam Masi Magam Festival 2022
உலக பிரசித்தி பெற்ற கும்பகோணம் மகாமக குளத்தில் வரும் 17-ஆம் தேதி மாசிமக தீர்த்தவாரி நடைபெற இருக்கிறது.
மாசி மாதம் மக நட்சத்திரத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் மாசிமக விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் மாசிமக விழாவின் போது, சிவாலயங்கள் மற்றும் வைணவ கோவில்களில் கொடியேற்றப்பட்டு பத்து நாட்களுக்கு உற்சவம் நடைபெறும். இந்தாண்டு, மகாமகம் தொடர்புடைய சிவன் கோவில்களில் வரும் 8-ஆம் தேதி கொடியேற்றப்பட்டு விழா தொடங்க இருக்கிறது.
ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் 15-ஆம் தேதி தேரோட்டமும், 17-ஆம் தேதி மகாமக குளத்தில் காலை 12 மணி முதல் 1 மணிக்குள் தீர்த்தவாரியும், இதனையடுத்து மற்ற சிவன் கோவில்களில் உள்ள மகாமக குளக்கரையில் தேரோட்டமும் நடைபெற இதுக்கிறது.
மேலும் மாசி மக விழாவை முன்னி்ட்டு வைணவ கோவில்களில் முதன்மையானதாக விளங்கும் சக்கரபாணி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராக பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களில் வரும் 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கும் பத்து நாள் உற்சவ நாட்களில் காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும் நடைபெற இருக்கிறது.
மாசிமக திருவிழாவையொட்டி இரவு நேரங்களில் தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. மாசிமக விழாவுக்கான ஏற்பாடுகளை அந்தந்த கோவில் நிர்வாகங்கள் செய்து வருகின்றன.
English Summary
Kumbakonam Masi Magam Festival 2022