இந்த ராசிக்காரர்கள் எல்லாம் உஷாரா இருங்க.! கிரகணமும், சித்ரா பவுர்ணமியும் ஒரே நாளில்.! - Seithipunal
Seithipunal


கிரகணங்கள் வான்வெளியில் நடக்கக்கூடிய அதிசயமான நிகழ்வுகள் ஆகும்.  பால்வழி அண்டத்தின் சுற்றுபாதையில்  சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது கிரகணங்கள் ஏற்படுகின்றன.

பொதுவாகவே சந்திர கிரகணம் பௌர்ணமி அன்று தான் ஏற்படும் என்றாலும் இந்த முறை சந்திர கிரகணம் சித்ரா பௌர்ணமி அன்று நிகழ இருக்கிறது. இது ஒரு அரிதான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. கிரகணங்கள் ஒரு அறிவியல் நிகழ்வு என்றாலும் அவை சம்பிரதாயங்களுடனும் தொடர்புடையது.

கிரகணங்கள் மற்றும் கோள்கள் ஆகியவை மனித வாழ்வுடனும் தொடர்புடையது. அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் ராசியின் அடிப்படையில் மனித வாழ்வுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. அதிலும் இந்த கிரகணமானது சித்ரா பௌர்ணமி அன்று நடைபெற இருப்பதால் கூடுதல் கவனம் பெறுகிறது.

இந்த கிரகணமானது மேஷம், ரிஷபம், சிம்மம் மற்றும் கடகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக  ஜோதிடர்கள் கணித்திருக்கின்றனர். இந்த ராசிக்காரர்கள் நிதி பரிவர்த்தனைகளிலும், பயணத்தின் போதும் கவனம் தேவை என அவர்கள் எச்சரித்துள்ளனர். உறவுகளுடனும் உடன் பணிபுரிபொருளுடனும் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கணித்திருக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lunar eclipse on Chitra Poornami requires attention for these zodiac signs


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->