தினம் ஒரு திருத்தலம்... ஒருநாள் மட்டும்... மூஞ்சுறு மற்றும் நந்தி வாகனம்..!!
makali amman temple in vadavalli
அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில் :
தினம் ஒரு திருத்தலம் பகுதியில் நாம் இன்று அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயிலை பற்றி பார்க்கலாம் வாங்க...
கோயில் எங்கு உள்ளது :
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வடவள்ளி என்னும் ஊரில் அருள்மிகு மாகாளி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயிலின் சிறப்புகள் :
அரச மரத்தடியில் பிள்ளையார் சிலை உள்ளது. அதன் முன்பு மூஞ்சுறு மற்றும் நந்தி வாகனங்கள் ஒரே இடத்தில் இருப்பதும், சித்திரை மாதத்தில் ஒரு நாள் மட்டும் சூரியனின் ஒளி அம்மன் மீது படுவதும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது.
அம்மனுக்கு புதியதாக கருவறை, அர்த்த மண்டபம் கல்திருப்பணியாகவும், விமானம், முன்மண்டபம், விநாயகர், முருகன், கருப்பராயன், கன்னிமார் உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் சிறப்புமிக்கவையாக விளங்குகின்றன.
வேறென்ன சிறப்பு :
கிழக்கு திசை நோக்கியுள்ள கோயிலின் உள்ளே சென்றதும் மாகாளி அம்மன், மேற்கு பார்த்த சிம்ம வாகனம் ஆகியவை அமைந்துள்ளது.
கோயிலின் முகப்பில் தலவிருட்சமாக வேப்பமரம் அமைந்துள்ளது.
கோயிலுக்கு வடக்கு மற்றும் கிழக்கு வாசல் இருக்கிறது.
திருவிழாக்கள் :
சித்திரை திருவிழா, வைகாசி விசாகம், பொங்கல் விழா ஆகியவை இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.
5 வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பிரார்த்தனைகள் :
நோய் நொடி நீங்க, திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற இக்கோயிலில் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
தொழிலில் நினைத்த காரியங்கள் நிறைவேறவும் இக்கோயிலின் அம்மனை பிரார்த்திக்கின்றனர்.
நேர்த்திக்கடன்கள் :
மாங்கல்ய காணிக்கை மற்றும் பூச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகின்றது.
English Summary
makali amman temple in vadavalli