மார்கழி மாதம்..எப்பொழுது, எப்படி கோலம் போட வேண்டும்.! எப்படியெல்லாம் கோலம் போடக்கூடாது.!
Markazhi Month kolam special
நம் கலாச்சாரத்தில் வீட்டின் முன்பு, சாணம் தெளித்து கோலம் போடுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, கடும் பனி பெய்யும் மார்கழி மாதத்தில் இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. கோலம் போடுவதற்கும், நம் வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கோலம் போடுவது பூமிக்கு செய்யும் மரியாதை ஆகும்.
கோலம் என்பதற்கு பல பொருள் இருந்தாலும் அலங்கரித்தல் என்ற பொருளே முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. எனவே, வீட்டின் வாசலில் கோலம் போடும்பொழுது அது வீட்டையே அலங்கரிப்பதால் தினந்தோறும் வாசலில் கோலம் போடப்படுகிறது.
கோலம் போடுவதில் கூட பலர், சில விஷயங்களைக் காலம் காலமாக கடைபிடித்து தான் வருகின்றன. அந்தவகையில் கோலம் போடும்போது செய்யக்கூடாத சில செயல்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
எப்பொழுது, எப்படி கோலம் போட வேண்டும்?
கோலத்தில் புள்ளி, கோடு போன்றவை போடும்போது சிறு தவறு ஏற்பட்டால் காலினால் அழிக்கக்கூடாது. கையால் அழிக்க வேண்டும்.
வேலைக்காரர்களைக்கொண்டு கோலம் போடுதல் கூடாது.
சுபகாரியங்களின் போது இரட்டைக்கோடு வருவது போலவும், அசுபகாரியங்களின் போது ஒற்றைக்கோடு வருவது போல் போட வேண்டும்.
தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம் போடக்கூடாது.
இடதுகையால் கோலமிடக்கூடாது. வலது கையால்தான் கோலமிட வேண்டும்.
வாசல்படிகளில் குறுக்குக்கோடுகள் போடக்கூடாது.
பெண்கள் குனிந்தபடி நின்றுதான் கோலம் போடவேண்டுமே தவிர, அமர்ந்துகொண்டு கோலம் போடக்கூடாது.
தெய்வீக வடிவங்களைக் குறிக்கும் கோலங்களை வீட்டுவாசலில் போடக்கூடாது.
இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும் நாட்களிலோ, அமாவாசை நாட்களிலோ கோலம் போடக்கூடாது.
English Summary
Markazhi Month kolam special