புதன்கிழமை... பணவரவை தரும் மணிபிளான்ட்... சிம்பிள் டிப்ஸ்.!
money planet in wednesday special
மணிபிளான்ட் செடியும்.. புதன்கிழமை வழிபாடும்:
மணிபிளான்ட் செடியை வளர்த்தால் செல்வம் பெருகி, சகல ஐஸ்வர்யங்களும் வீட்டில் குடி கொள்ளும் என்பது நம்பிக்கை. இதனால் பலரும் மணிபிளான்ட் செடியை வளர்க்க ஆசைப்படுவார்கள்.
மணிபிளான்ட் செடி என்பது நமக்கு வருமானத்தை தேடி தருவது. வீண் விரயத்தை குறைப்பது என்பவை நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். நேர்மறை ஆற்றலை அதிகரிக்க கூடிய சக்தி கொண்ட இந்த மணிபிளான்ட் செடியை, சிலர் வீட்டில் வைத்த பின்பும் கஷ்டங்கள் இருந்து கொண்டே இருக்கும். அந்த செடியும் வாடி வதங்கி காணப்படும்.
உங்கள் வீட்டில் மணிபிளான்ட் செடி வைத்த பின்பு தான் கஷ்டம் வருவதாக நீங்கள் உணர்ந்தால், அந்த மணிபிளான்ட் செடியை உங்களுக்கு ராசியான செடியாக மாற்றிக் கொள்ள இந்த எளிய பரிகாரத்தை செய்தாலே போதும். அது என்ன பரிகாரம்? பார்க்கலாம் வாங்க...!
எந்த திசையில் வைக்க வேண்டும்?
மணிபிளான்ட் செடியை பொறுத்தவரை வீட்டிற்கு வெளியில் வைப்பதை விட வீட்டிற்கு உள்ளே வைத்து வளர்ப்பது சிறந்த பலனை அளிக்கும். ஒரு தொட்டியில் அல்லது கண்ணாடி குவளையில் வளர்க்கலாம்.
பச்சை நிற தொட்டியில் அல்லது நீலநிறம் கொண்ட பாட்டிலில் இந்த செடியை வைத்தால் அதிக செல்வத்தை வாரி வழங்கும்.
மணிபிளான்ட் செடியை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் மட்டும் வைத்து விடக்கூடாது.
ஏனென்றால் இந்த திசையானது எதிர்வினையை அதிகரிக்கும் திசை என்பதால் நமது வீட்டில் நஷ்டம் அதிகரிக்கும். வீண் விரயங்கள் ஏற்படும்.
புதன்கிழமை வழிபாடு :
புதன்கிழமை அன்று புதியதாக மணிபிளான்ட் செடியை வாங்கி வீட்டில் வைக்கவும். வாங்கி வைத்த அடுத்த புதன்கிழமை அந்த மணிபிளான்ட் செடியின் வேர் பகுதியில் இருந்து, சிறு துண்டை கத்தி படாமல், விரல்களால் கிள்ளி எடுக்க வேண்டும். அந்த வேரை எடுப்பதற்கு முன்பு, செடியிடம் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்ளுங்கள்.
அந்த வேரை சிறிது மஞ்சள் தண்ணீர் ஊற்றி கழுவி, ஒரு சிகப்பு துணியில் கட்டி புதன்கிழமை அன்று பணம் வைக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளவும்.
பணம் ரீதியாக உங்களுக்கு இருக்கும் பல சிக்கல்களுக்கு தீர்வினை இந்த வேர் கொடுக்கும் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை. இதனை நம்பிக்கையோடு மனதார செய்யுங்கள் முன்னேற்றத்தை கண்கூடாக காணலாம்.
இந்தப் பரிகாரத்தை புதிய மணிபிளான்ட் செடியை வாங்கி வைத்து தான் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களால் புதிய செடி வாங்க முடியாது என்ற சூழ்நிலையில் வீட்டில் இருக்கும் பழைய மணிபிளான்ட் செடியை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உங்களால் முடிந்த போது புதிய மணிபிளான்ட் செடியை வாங்கி வைத்து அந்த பழைய வேரை புதுப்பித்துக் கொள்ளலாம்.
English Summary
money planet in wednesday special