நவராத்திரியின் 2ம் நாள் பூஜைக்கு என்ன செய்ய வேண்டும்? முழுவிவரம் இதோ!!
navaratri festival 2nd day pooja full details
நவராத்திரிப் பெருவிழாவில், தினமும் பூஜைகள் முடிந்ததும் வீட்டுக்கு வந்திருக்கும் பெண்களுக்கு மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்குவார்கள்.
நாம் எந்தப் பொருட்களைத் தானமாகவழங்குகிறோமோ, அந்தப் பொருட்களுக்கு எந்தக் காலத்திலும் எப்போதும் எவரிடமும் கையேந்தத் தேவையில்லை என்கிறார்கள் ஆச்சார்யர்கள். எந்தந்த நாளில் என்னவெல்லாம் மங்கலப் பொருட்களைத் தானமாக வழங்கலாம் என்றும் தாத்பரியம் தெரிவிக்கிறது. துவிதியை நாளில் குங்குமம், மஞ்சள் ஆகியவற்றை ஆடையுடன் சேர்த்துத் தருவது நல்லது. இதனால் மாங்கல்ய பலம் பெருகும் என்பது ஐதீகம்.
துர்கை அம்மனை நவராத்திரியின் 2ம் நாளில் கௌமாரீ குமாரியாக அலங்காரம் செய்து வழிபட வேண்டும். மூன்று வயதுப் பெண் மஞ்சள் கொடுத்து குமாரி என்று அழைத்துப் பூஜை செய்தல் விளையாட்டு பொருள் கல்யாணி ராகக் கீர்த்தனை, த்விதீயாவரணக் கீர்த்தனை பாடவும், முல்லைப்பூ, துளசி மாம்பழம் புளியோதரை வறுவல் இவைகளைப் பயன்படுத்தவும், குமாரிதேவிக்கு ஆடை ஆபரணம் உபசாரம் செய்து துதித்துப் போஜனம் செய்விக்கவும்.
இரண்டாம் நாள் வழிபாடு :
ஆதிபராசக்தி அம்மன் வடிவம் : கௌமாரீ குமாரி
அன்னைக்கு சாற்ற வேண்டிய மாலை : முல்லைப்பூ
அன்னைக்கு சாற்ற வேண்டிய இலை : துளசி
அன்னைக்கு சாற்ற வேண்டிய வஸ்திர நிறம் : மஞ்சள்
அன்னையின் அலங்காரத்திற்கு பயன்படுத்த வேண்டிய மலர்கள் : மஞ்சள் நிற பூக்கள்
கோலம் : அரிசி மாவால் கட்டம் போட்ட கோலம்
நைவேத்தியம் : புளியோதரை, பயந்தம்பருப்பு, சுண்டல்
குமாரி பூஜையில் உள்ள குழந்தையின் வயது : 3 வயது
பாட வேண்டிய ராகம் : கல்யாணி ராகக் கீர்த்தனை, த்விதீயாவரணக் கீர்த்தனை
பயன்படுத்த வேண்டிய இசைக்கருவி : புல்லாங்குழல்
குமாரிக்கு தரவேண்டிய பிரசாதம் : சுண்டல்
பலன் : பூர்வ ஜென்ம பாவம் நீங்க, புண்ணியம் கோடி கிடைக்கும்.
English Summary
navaratri festival 2nd day pooja full details