நெய்க்காரப்பட்டிஸ்ரீ மஹா காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா..கோழி,கிடா வெட்டி சிறப்பு பூஜை!
Neikkarapatti Sri Maha Kaliamman Temple Panguni Festival Special Pooja for Chicken and Ram
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டிஸ்ரீ மஹா காளியம்மன் 36 ஆம் ஆண்டு பங்குனி திருவிழாவில் ஆடு, கோழி,கிடா வெட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
சேலம் மாவட்டம் நெய்க்காரப்பட்டி கிராமம் என். மேட்டூர் கோடிக்காடு என்னும் புண்ணிய பூமியில் எழுந்தருளி திருவருள் செய்து வரும் அருள்மிகு ஸ்ரீ மஹா காளியம்மன் பங்குனி திருவிழா வெகு விமர்சியாக நடைபெற்றது. பங்குனி மாதம் 20 ஆம் தேதி வியாழக்கிழமை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று கோவில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீகாளியம்மன்அலங்காரம் மிகச் சிறப்பான முறையில் செய்திருந்தனர் .
காலை 8 மணிக்கு பொங்கல் வைத்தல் ஆடு, கோழி,கிடா வெட்டுதல் மாலை 5 மணி அளவில் இளந்தோப்பு ஸ்ரீ ஜெயகணபதி ஆலயத்தில் இருந்து அம்மனுக்கு அழகு குத்துதல் அக்னி கரகம் பூங்கரகம் எடுத்தல் இரவு 8 மணிக்கு பிரம்மாண்டமான மாபெரும் விசேஷ வானவேடிக்கை இரவு 9 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.
இவ்விழாவில் நிர்வாக கமிட்டியினர் தலைவர் பட்டுக்கடை ஏ.வி. சுப்பிரமணியன் துணைத் தலைவர் கே. அய்யனார் செயலாளர் கே மணி பொருளாளர் சி.கே பெரியசாமி கணேசன் ராஜீ செல்லப்பன் தனக்கோட்டி, விழா கமிட்டியாளர்கள் கோவிந்தராஜ், ஜாக்கி, சரவணன் வெங்கடேஷ், மோகன், விஸ்வநாதன், சசிகுமார், கோவிந்தராஜ், கண்ணன், நாகராஜன், முருகன், ஆறுமுகம், அருள் சக்தி, சுதாமன், ராமச்சந்திரன், கோபி, சங்கர், கோபால்,பூபதி, நடராஜ், செல்வம், இளங்கோ, தனபால், ரகுநாதன், மணிகண்டன், கோவிந்தராஜ், பூபதி,வசந்தகுமார், ரவி பூபதி, கார்த்தி,மற்றும் விழா குழு உறுப்பினர்கள் ஊர் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
English Summary
Neikkarapatti Sri Maha Kaliamman Temple Panguni Festival Special Pooja for Chicken and Ram