சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு 'இதையெல்லாம்' செய்யவே கூடாதாம்.. வாங்க தெரிஞ்சுக்கலாம்..!! - Seithipunal
Seithipunal



நமது சாஸ்திரத்தின் படி, நாம் எந்த நேரத்தில் எதெது செய்ய வேண்டும் என்றும், எதெது செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் சூரியன் மறையும் நேரத்தில் பல்வேறு விஷயங்களை செய்யக் கூடாது என்றும் நமது சாஸ்திரத்தில் விளக்கப் பட்டுள்ளது. 

அவை என்னென்ன என்று இங்கு பார்ப்போம். 

* மாலைநேரத்தில் வீட்டின் பிரதான வாசலில் இருக்கும் கதவை ஒருபோதும் மூடி வைக்க கூடாது. அப்படி மூடினால் மஹாலட்சுமி நமது வீட்டிற்கு வருவது தடைபட்டு, வறுமை நம்மை சூழும். 

* மாலையில் துளசி செடிக்கு பூஜை செய்து தீபம் ஏற்ற வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஆனால் அதே சமயம் தெரியாமல் கூட நமது கைகளால் சூரிய அஸ்தமன நேரத்தில் துளசியை தொட்டு விடக்கூடாது. 

* யாரேனும் உங்கள் வீட்டு வாயிலில் மாலை நேரம் பிச்சை கேட்டு வந்தால், அவரை வெறும் கையோடு அனுப்பி விடக்கூடாது. உங்களால் முடிந்த ஏதேனும் ஒன்றை கொடுத்தே அனுப்ப வேண்டும். 

* பூண்டு, வெங்காயம், புளி, உப்பு மற்றும் ஊசி ஆகியவற்றை ஒருபோதும் மாலை நேரத்தில் யாருக்கும் கொடுக்க கூடாது.

* சூரியன் அஸ்தமனம் ஆன பிறகு யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது. மாலை நேரத்தில் கடன் கொடுத்தால் அந்த பணம் திரும்ப கிடைக்காது என்று சாஸ்திரம் கூறுகிறது. 
 
* முக்கியமாக சூரிய அஸ்தமன நேரத்தில் வீட்டில் தூங்கவே கூடாது. 

*  மேலும் இந்த நேரத்தில் வீட்டில் யாருடனும் சண்டையிடக் கூடாது. ஏனெனில் சூரிய அஸ்தமனம் ஆன பிறகு மஹாலட்சுமி நமது வீட்டிற்கு வருவதால், இந்த நேரத்தில் வீட்டில் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் மஹாலட்சுமி வீட்டிற்குள் வருவது தடைபடும். இதனால் வீட்டில் வறுமை சேரும். நம்மிடம் இருக்கும் பணத்தை இழக்க நேரிடும் என்று சாஸ்திரம் கூறுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Never Do These Things After Sunset


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->