சூழ்நிலைகளை அறிந்து சாதுர்யமாக செயல்படும் ராசிக்கார்களுக்கு புத்தாண்டு ராசிபலன்கள்.! - Seithipunal
Seithipunal


சூழ்நிலைகளை அறிந்து சாதுர்யமாக செயல்படும் மிதுன ராசி அன்பர்களே.!

2022ஆம் வருடத்தில் மிதுன ராசிக்காரர்களுக்கு புதுமையான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்திறனும், புத்திசாலித்தனமும் வெளிப்படும்.

பொருளாதாரம் :

பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைப்பதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் அவ்வப்போது சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும்.

பெண்களுக்கு :

நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வெளியூர் செல்வது தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பூர்வீகச் சொத்துக்களில் எதிர்பார்த்த பங்குகள் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர்மறையான எண்ணங்கள் படிப்படியாக குறையும்.

மாணவர்களுக்கு :

மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் நுட்பத்திறனும், செல்வாக்கும் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

வியாபாரிகளுக்கு :

வியாபார பணிகளில் கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து நடந்து கொள்வது மேன்மையை ஏற்படுத்தும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கமிஷன் தொடர்பான வியாபார வழிகளில் லாபம் மேம்படும். 

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோக பணிகளில் தவறிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் நிதானம் வேண்டும். பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். உணர்ச்சிவசப்படாமல் பொறுமையுடன் முடிவெடுப்பது நல்லது. செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படுவது மேன்மையை ஏற்படுத்தும். 

அரசியல்வாதிகளுக்கு :

அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு வெளிவட்டாரங்களில் மதிப்பும், செல்வாக்கும் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மற்றவர்கள் கூறும் கருத்துக்களை கலந்தாலோசித்து முடிவெடுப்பது நல்லது.

கலைஞர்களுக்கு :

கலை சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். செல்வமும், செல்வாக்கும் கூடுவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். இழுபறியில் இருந்துவந்த தனவரவு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும்.

நன்மைகள் :

மனதில் புத்துணர்ச்சியும், செய்கின்ற முயற்சிகளில் வெற்றியும், புதுவிதமான யோசனைகளின் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கக்கூடிய காலக்கட்டமாக மிதுன ராசி அன்பர்களுக்கு இந்த புத்தாண்டு அமையும்.

கவனம் :

வியாபாரம் சார்ந்த பணிகளிலும், பணியாட்களிடமும் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

வழிபாடு :

குலதெய்வத்தை வழிபாடு செய்துவர எண்ணங்களில் தெளிவும், சுபகாரியங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New year rasipalan for midhunam


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவின் வாக்குகள் யாருக்கு செல்லும்?




Seithipunal
--> -->