பங்குனி உத்திர ஆராட்டு விழா - சபரிமலையில் எப்போது நடை திறப்பு.?
panguni uthira arattu vizha festival in sabarimalai
கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
2-ந் தேதி காலை 9.30 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரரு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைக்கிறார். 11-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும்.

விழாவின் இறுதி நாளான 11-ந் தேதி பகல் 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவு பெறும். சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு 18-ந் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடைபெறும். விஷு பண்டிகை 14-ந் தேதி கொண்டாப்படுகிறது.
சபரிமலையில் கடந்த மாத பூஜையின் போது பக்தர்கள் 18-ம் படி ஏறி வந்தவுடன் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இனி வரும் பூஜை நாட்களிலும் பக்தர்கள் நேரடியாக சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கூட்டம் அதிகமாகவுள்ள நாட்களில் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள நேரடியாகவும் மற்றவர்கள் மேம்பாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.
English Summary
panguni uthira arattu vizha festival in sabarimalai