தனி மாநில அந்தஸ்து கோரி டில்லியில் ஆர்ப்பாட்டம்..புதுச்சேரி அனைத்து அமைப்புகள் அறிவிப்பு!
Protest in Delhi demanding statehood Puducherry announces all organisations
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி சென்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது என அனைத்து அமைப்புகளும் அறிவித்துள்ளன .
புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து கோரி பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்றத்தில் 16வது முறையாக தனி மாநில அந்தஸ்து கோரி மத்திய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக நேற்று அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து சட்டமன்ற உறுப்பினர் கோ.நேரு அவர்கள் தலைமையில் கலந்தாய்வுக் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் - தோழமைக் கூடல் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி சென்று கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது.
2. குடியரசுத் தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் கட்சித் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்துக்கான கோரிக்கை வலியுறுத்தி ஆதரவு கேட்பது.
3. டெல்லியில் இருந்து புதுச்சேரி திரும்பியவுடன் புதுச்சேரி, காரைக்காலில் ஏன் தனி மாநில அந்தஸ்து தேவை என்ற பரப்புரை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அமைப்பு தலைவர்கள்: லோகு.அய்யப்பன் திராவிடர் விடுதலைக் கழகம்,கோ.சுகுமாரன் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு,கோ.அ.ஜெகநாதன் மக்கள் வாழ்வுமை இயக்கம், ஜெ.சம்சுதீன்அகில இந்திய மஜ்லிஸ் கட்சி, பி.பிரகாஷ் தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்
சீ.சு.சாமிநாதன் புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பு, கணேஷ்ஆம் ஆத்மி, இரா .முருகானந்தம்,மனித உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்,ம.இளங்கோ,தந்தை பெரியார் திராவிடர் கழகம், சி.ஸ்ரீதர்,தமிழக வாழ்வுரிமைக் கட்சி,தெ.வ.அறிவுமணி ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் கட்சி, பஷீர் பி போல்டு, கூட்டமைப்புஜெ.பிராங்கிளின் இயற்கை மன்றும் கலச்சார புரட்சி இயக்கம், ஆ.பாவாடைராயன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைபுதுவைத் தமிழ்நெஞ்சன், புதுச்சேரி எழுத்தாளர் கழகம், தூ .சடகோபன் புதுச்சேரி தன்னுரிமைக் கழகம், கி.தாமரைகண்ணன், இந்திய தேசிய இளைஞர் முன்னணி, இரா. வேலுச்சாமி,தமிழ் தேசிய பேரியக்கம், நாராயணசாமி சென்டாக் மாணவர் பெற்றோர் சங்கம் கார்த்திகேயன்,குளங்கள் காப்போம் இயக்கம்,தேவநீதி புதிரை வண்ணார் பாதுகாப்பு இயக்கம், திரு.அரிகிருஷ்ணன்,இந்திய மக்கள் பாதுகாப்பு இயக்கம்,ஆ.ஆனந்தன்,புதுச்சேரி தொல் வரலாற்று ஆய்வு நடுவம்,கோ.அழகர்,தமிழர் களம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
English Summary
Protest in Delhi demanding statehood Puducherry announces all organisations