பவளமல்லி மரத்தை வீட்டில் வளர்க்கலாமா.? விருட்ச சாஸ்திரம் என்ன கூறுகிறது.?!  - Seithipunal
Seithipunal


பவழமல்லி அல்லது பவளமல்லி அல்லது பாரிஜாதம் என்னும் இம்மரம் தெற்காசிய நாடுகளில் வளரும். பவளமல்லியின் அறிவியல் பெயர் லேஉவயவொநள யசடிழச-வசளைவளை ஆகும். பவளமல்லி மரம் சிறு மரவகையைச் சேர்ந்தது. இதன் மலர் தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரி மாநிலத்தில் மாநில மலராக சிறப்பிடம் பெறுகின்றது.

பவழ (பவள) நிறக் காம்பும், வெண்ணிறமான இதழ்களும் உடைய பூக்களை கொண்டது. இதற்கு தனிச் சிறப்பான நறுமணம் உண்டு. குளிர் மாதங்களில் பின்னிரவில் பூத்து விடியற்காலையில் உதிரத் தொடங்கும். இம்மரம் இருக்கும் இடமே நறுமணம் வீசும். இந்த மலரை சேடல் என்றும் குறிப்பிடுவர்.

இம்மரம் 3-4 மீட்டர் உயரத்திற்கு மிக விரைவாக வளரும். இந்த மரம் வளமான மண்ணில் நன்கு வளரும். இதற்கு சிறிது வெய்யிலும், நிழலும் தேவைப்படும். நீர் தேங்காத இடத்தில் நன்கு வளரும். 

இதன் இலைகள் நீள்வட்ட வடிவில் கூரான முனைகளுடையவையாகக் காணப்படும். எதிர் அடுக்கில் அமைந்திருக்கும் இலைகள் சொரசொரப்பாக இருக்கும். கிளை நுனிகளில் பூக்கள் பூக்கும். இப்பூக்கள் 5-7 இதழ்களை கொண்டவை. பூவின் வாசம் 100 அடி சுற்றளவுக்கு வீசும் தன்மை கொண்டது. 

இதன் காய்கள் தட்டையாக, வட்ட வடிவில் காணப்படும். இரு விதைகளை கொண்டிருக்கும். இந்த மரம் ஆண் மரம் தான். தன்மகரந்தச் சேர்க்கையால் காய்கள் விடும். 

ஆயுர்வேத மருத்துவத்தில் பவளமல்லி விதைகளும், இலைகளும், பூக்களும் வயிற்றுத் தொந்தரவு, மூட்டுஃஎலும்பு வலி, காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கும் இன்னும் பல விதங்களிலும் மருந்தாகப் பயன்படுகின்றன.

இம்மரம் மண் அரிப்பைத் தடுத்து, மண்ணிலுள்ள நைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பேட் போன்ற சத்துகளை வீணாக்காமல் தடுக்கிறது. 

வீட்டில் பவளமல்லி மரத்தை வளர்க்கலாமா?

வீடுகளில் பவளமல்லி மரங்களை வளர்த்தால் முன்னோர்கள் ஆசி கிடைப்பதோடு குழந்தைகள் படிப்பு நன்றாக இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் ஏற்படும், வியாபாரம் பெருகும். 

பவளமல்லி மரத்தை எந்த திசையில் வளர்க்கலாம்?

பவளமல்லி மரங்களை தெற்கு, மேற்கு திசைகளில் வளர்ப்பது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pavalamalli tree In House


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->