வீட்டில் ஏற்றிய விளக்கு தானாக நின்றால் அபசகுனமா? - Seithipunal
Seithipunal


வீடுகளில் ஏற்றப்படும் விளக்கு தானாக அணைந்து விடும். சில நேரத்தில் பூஜை செய்யும் போதும் திடீரெனெ விளக்கு நின்றுவிடும். இது அபசகுனமா ? என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

வீட்டில் காலை மற்றும் மாலை நேரத்திலும், பூஜை செய்யும் போதும் தீபம் ஏற்றுவோம். தீபம் ஏற்றினால் வாழ்வில் உள்ள இருள் நீங்குவது மட்டுமின்றி வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளும் நீங்கும். சாஸ்திரங்களின் படி தீபம் ஏற்றினால் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

ஆனால் நாம் இறைவனுக்காக ஏற்றிய விளக்கு திடீரென நின்று விட்டால் மன அமைதியை இழக்கிறோம். அது ஏதோ கெட்ட சகுனம் என்று நமக்கு நாமே பயம் கொள்கிறோம்.

பொதுவாக விளக்கு நிற்பதற்கு காற்றின் வேகம், எண்ணெய் குறைந்து போவது, திரி சரி இல்லாமல் இருப்பது என்று பல காரணங்கள் உள்ளன. இதற்கும் சகுனத்திற்கும் எந்தவிதமான சம்மந்தமும் கிடையாது.

நாம் பூஜை செய்யும் போது விளக்கு தானாக நின்றால், அது ஏன் நின்றது? என்ற காரணத்தை முதலில் அறிந்து அதை சரி செய்ய வேண்டும். இப்படி செய்யாமல் கவலைகொள்ள வேண்டாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

poojai vilakku off in house good or bad


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->