அதிர்ச்சி.. திருவண்ணாமலை கோவிலில் அம்மனுக்கு ரேஷன் கடை சேலை அணிவிப்பு.!
ration saree wear to amman statue in thiruvannamalai temple
சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். அதிலும் குறிப்பாக பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காக வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பவுர்ணமியின்போது கோவிலில் உண்ணாமலை அம்மன் சன்னதியின் முன்பு உள்ள அம்மன் சிலைக்கு ரேஷன் கடையில் வழங்கப்படும் விலையில்லா சேலை அணிவிக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
இந்த சம்பவம் குறித்து அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் ஜோதியிடம் கேட்டபோது, "திருவூடல் நிகழ்ச்சியில் மண்டக படியின்போது பக்தர்கள் சிலர் அம்மனுக்கு சேலையை சாத்தினர். இதில் பக்தர் ஒருவர் ரேஷன் சேலையை வழங்கி உள்ளார்.
இந்த ரேஷன் கடை சேலை பவுர்ணமியின் போது அம்மன் சிலைக்கு அணிவிக்கப்பட்டு உள்ளது. இதை அறிந்ததும் உடனடியாக அந்த சேலை மாற்றப்பட்டது' என்று விளக்கம் அளித்துள்ளார்.
English Summary
ration saree wear to amman statue in thiruvannamalai temple