சபரிமலை ஐயப்பன் கோயில் ஆடி மாத பூஜை! பக்தர்கள் எதிர்பார்த்த அந்த அறிவிப்பு வெளியானது! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத பூஜைக்காக வரும் 16ம்  தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. இதற்கான ஆன்லைனில் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

கேரளாவில்  உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுக்கு ஒரு முறை 60 நாட்கள் நடைபெறும் மண்டல , மகர விளக்கு பூஜைகளை தவிர தமிழ் மாதம் பிறக்கும் முதல் நாளன்று மாதம்தோறும் நடை திறக்கப்படும்.

மேலும் விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி உத்திர திருவிழாவின் போதும் நடை திறக்கப்படுவது வழக்கம். ஆடி மாத பூஜைக்காக வரும் 16ஆம் தேதி மாலை நடை திறக்கப்படவுள்ளது.

இதனையடுத்து 16ம் தேதி மாலை 5.30 மணியளவில் தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில், மேல்சாந்தி தாமோதரன் நம்பூதிரி நடையை திறந்து ஐயப்பனுக்கு தீபாராதனை நடத்தவுள்ளார்.  17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை கணபதி ஹோமம், உஷபூஜை ஆகிய வழக்கமான பூஜைகளுடன் படி பூஜை, உதயாஸ்தமன பூஜை ஆகிய சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளது.

இந்த 5 நாட்களிலும் நெய் அபிஷேகம் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 21ம் தேதி இரவு 10 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். 16 ம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை ஆடி மாத பூஜைக்காக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sabarimala Ayyappan Temple Adi Month Puja Online Booking Start


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->