வீட்டில் மாடிபடிகள் எந்த திசையை பார்த்து இருக்க வேண்டும்? மாறாக இருந்தால் என்ன செய்யவேண்டும்?
steps vasthu in tamil
தற்போதைய காலகட்டத்தில் வீடுகட்டுபவர்கள் ஒவ்வொன்றையும் வாஸ்து படி பார்த்து பார்த்து கட்டி வருகின்றனர். ஆனால், சில கட்டுமான பொறியியல் விதிகளுக்கு ஏற்ப வாஸ்து சாஸ்திர விதிகளும் பொருத்தமாக அமைவதில்லை. இந்த நிலையில் வாஸ்து ரீதியாக கடைப்பிடிக்க வேண்டிய எளிய விதிமுறைகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
* வீட்டில் படிக்கட்டுகள் அல்லது அதன் கைப்பிடிச் சுவர் இடிந்திருப்பது, அவற்றில் விரிசல்கள் இருப்பது போன்ற குறைகளை உடனடியாக கவனித்து சீர் செய்வது அவசியம்.
* மாடிப்படிகளில் ஏறிச்செல்லும் முறை கடிகார சுற்று அமைப்பில் இருக்க வேண்டும். இல்லையென்றால், ஏறுபவர் வடக்கு திசையிலிருந்து தெற்கு நோக்கியோ அல்லது கிழக்கு திசையிலிருந்து மேற்கு நோக்கியோ மேலே செல்வது போல இருக்க வேண்டும்.
* அப்படி இல்லையென்றால், படிக்கட்டுகள் தொடங்கும் இடத்தில் படியின் இரு புறங்களிலும் உயிரோட்டமுள்ள மலர்கள் கொண்ட செடிகளை வைக்க வேண்டும்.
* வீட்டின் ஈசானிய திசை எனப்படும் வடகிழக்கு திசையில், மாடிப்படிகள் அமைந்திருந்தால் முதல் படிக்கட்டின் இரு புறமும் தண்ணீர் நிரப்பிய பாத்திரம் வைத்து அதில் வாசமுள்ள மலர்களை போட்டு வைக்கலாம்.
* வீட்டின் தலைவாசலுக்கு எதிராக மாடிப்படிகள் அமைந்திருக்கும் நிலையில், எண்கோண கண்ணாடி அல்லது பெங்சூயி பாகுவா கண்ணாடியை தலைவாசலுக்கு மேலே பொருத்தலாம். அதில் படிகள் எதிரொலிக்கப்படுவதால் வாஸ்து பாதிப்பு அகலும்.
* வீட்டின் உள்ளே அமைந்துள்ள மாடிப்படிகள், வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு திசை சுவர்களை ஒட்டியவாறு படிகளின் எண்ணிக்கையை 11, 13, 15, 17, 19, 21 என்ற ஒற்றைப்படை எண்களில் அமையும்படி சிறிய மாற்றம் செய்து கொள்ளலாம்.
* பூஜையறை, சமையலறையை ஒட்டியவாறு படிக்கட்டுகள் இருந்தால் அவற்றுக்கு அடர்த்தியான வண்ணங்களில் பெயிண்டிங் செய்யாமல் வெளிர் நிறத்தில் பெயிண்டிங் செய்யப்பட வேண்டும்.