முதலமைச்சர் மீதான அவதூறு பேச்சு!...39 பேர் அதிரடியாக கைது! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, ஜனசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு,மற்றும் அவர்களது குடும்பத்தினர் குறித்த அவதூறு வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதே போல், ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா குறித்தும் அவதூறு வீடியோ சமூக வலைத் தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

இதையடுத்து  தெலுங்கு தேசம் கட்சியினர் ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரத்தில்  நடிகை ஸ்ரீ ரெட்டி வீடியோ வெளியிட்டு அவதூராக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார்,  விரைவில் அவரை விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில்,  அவதுாறு வீடியோ வெளியிட்ட சமூக வலைதளங்களுக்கு விளக்கம் கேட்டு, இதுவரை 67 நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், 39 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Slanderous speech on the chief minister 39 people arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->