நாதக கூட்டத்தில் ஜாதி மோதல் - பாதியில் வெளியேறிய இளைஞர்கள்.!
youths out from ntk meeting in tirunelveli for cast problam
திருநெல்வேலி மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் ஜாதி ரீதியாக ஏற்பட்ட மோதல் ஏற்பட்டதால் கூட்டத்தில் பங்கேற்ற 20க்கும் மேற்பட்டோர் வெளியேறினர்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, நிர்வாகிகளுடன் கலந்தாய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார். அந்த வகையில், நேற்று முன்தினம் தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கலந்துரையாடல் முடிந்த நிலையில், நேற்று திருநெல்வேலியில் கலந்துரையாடல் நடத்தினார்.
அப்போது இளைஞர் அணி பாசறையை சேர்ந்த பார்வின் என்பவர் சீமான் பேசியபோது, தமக்கு ஒரு கருத்து இருப்பதாகக் கூறினார். அதற்கு சீமான்,'' ஜாதி ரீதியாக முகநுாலில் பதிவிட்டவன் தானே நீ உட்கார்; பேசாதே; இது என் கட்சி... விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம்'' என்று கூறியுள்ளார்.
கூட்டத்தில் பங்கேற்ற 20க்கும் மேற்பட்டோர் வெளியேறினர். இதனால், கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திருநெல்வேலியில் ஒரு ஜாதி தலைவரின் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலையிடும் சீமான், இன்னொரு தலைவரின் பிறந்த நாளில் சிலைக்கு மாலையிடாதது ஏன் என்று பார்வின் முகநுாலில் பதிவிட்டு இருந்தார். ''இதை வைத்தே, சீமான் பார்வின் மீது கோபப்பட்டுள்ளார்.
English Summary
youths out from ntk meeting in tirunelveli for cast problam