தமிழ் புத்தாண்டு சுபகிருது வருடம்... எப்படி அமையப் போகிறது.? சுபகிருது வருட பலன்கள் !
Tamil new year benefits
உலகிலேயே ஆதிகாலம் தொட்டு வானவியலில் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்களே! சூரியனை மையமாக வைத்தே தமிழர்கள் தங்கள் வாழ்க்கைமுறையை அமைத்தனர். சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது. சூரியன், முதல் ராசியான மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து, அந்த ராசியை விட்டு வெளியேறும் வகையில் உள்ள காலம் சித்திரை மாதம்.
புது வருட துவக்கம் :
சுபகிருது தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி சித்திரை மாதம் 01ஆம் நாள் வியாழக்கிழமையான இன்று பிறந்துள்ளது.
இடைக்காடர் சித்தர் இயற்றிய தனது நூலான 'அறுபது வருட வெண்பா" என்ற நூலில் சுபகிருது வருடத்தை பற்றி பாடல் பின்வருமாறு
சுபகிருது தன்னிலே சோழதே சம்பாழ்
அவமாமம் விலைகுறையு மான்சாம் சுபமாகும்
நாடெங்கு மாரிமிகு நல்லவிளை வுண்டாகுங்
கேடெங்கு மில்லையதிற் கேள்
அளவுக்கு அதிகமான பொருள் விரயங்கள் மூலம் சேமிப்புகள் குறையும். மழை அதிகமாக இருப்பதும் அளவுக்கு அதிகமான மழைநீர் சேமிப்பு இன்றி கடலில் கலக்கும். மண் சார்ந்த பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் பயன்பாடுகள் சீருடை சார்ந்த துறைகளில் அதிகரிக்கும்.
சுபகிருது வருட பலன்கள் :
உஷ்ணம் தொடர்பான நோய்கள் உண்டாகும்.
விபத்து தொடர்பான செயல்கள் அதிகரிக்கும்.
நீதி சார்ந்த துறைகளில் மாற்றமான சூழல் உண்டாகும்.
விளையாட்டு சார்ந்த துறைகளில் ஊக்கமளிப்பு கிடைக்கும்.
திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்.
அரசுகள் பலவிதமான கட்டுப்பாடுகளையும், மாற்றங்களையும் கொண்டு வரும்.
வர்த்தகம் தொடர்பான வியாபாரம் மற்றும் இணையம் சார்ந்த பரிவர்த்தனைகள் அதிகரிக்கும்.
மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும்.
பிறந்திருக்கின்ற இந்த தமிழ் வருடத்தில் நன்மைகள் மிகுதியாகவும், தீமைகள் குறைவாகவும் கிடைக்கப்பெற்று அனைவரின் வாழ்க்கையிலும் முன்னேற்றம் கண்டிட உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.