பம்பையில் பயங்கரம் : ஐயப்ப பக்தர்கள் சென்ற வாகனம் தீப்பிடித்து எரிந்து நாசம்!...பக்தர்களின் நிலை என்ன ஆனது தெரியுமா? - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலை ஐயப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு கேரளா மட்டுமின்றி, தமிழகம், கர்நாடகம், தெலுங்கானா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகை புரிகின்றனர்.

மேலும் இந்த கோவிலில் நடப்பு ஆண்டின் மண்டல பூஜைக்காக இந்த மாதம் 15-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்ட நிலையில்,  டிசம்பர் 26-ம் தேதி வரை திறந்திருக்கும். பின்னர், கோவில் நடை அடைக்கப்பட்டு மகரவிளக்கு ஜோதி விழாவிறகாக  டிசம்பர் 30-ம் தேதி முதல் 2025 ஜனவரி 19-ம்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.  இந்த காலகட்டங்களில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் இதனால் அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இந்த நிலையில், அரசு பேருந்து ஒன்று பம்பையில் பக்தர்களை இறக்கிவிட்டு, மீண்டும் அங்கிருந்து நிலக்கல் திரும்பும் பக்தர்களை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து பேருந்தில் இருந்த பக்தர்கள் அனைவரும் உடனடியாக இறக்கி விடப்பட்ட நிலையில்,  சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த தீ விபத்தில் பேருந்து முழுமையாக எரிந்து நாசமானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Terror in pambai the vehicle carrying ayyappa devotees caught fire and was destroyed do you know what happened to the devotees


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->