கோவையில் பிரபல அரசியல் கட்சி தலைவர் கைது!
IMK ArjunSampath Protest Arrest
கோவை பந்தய சாலை காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாக்கை வெட்டி விடுவேன் என்று மிரட்டல் விடுத்த வழக்கில், இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை பந்தய சாலையில் அக்கட்சின் தலைவர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி அர்ஜுன் சம்பத் தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து போராட்டக்காரர்கள் - போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
English Summary
IMK ArjunSampath Protest Arrest