நூலிழையில் உயிர் தப்பிய இஸ்ரேல் பிரதமர்!...திடீரென பற்றி எரிந்த தீயால் பதற்றம்! - Seithipunal
Seithipunal


கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய பகுதியில், ஹமாஸ் அமைப்பினர் ஆயுதங்களை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த போர் தொடங்கி ஓராண்டினை நிறைவு செய்துள்ளது.

இதற்கிடையே, இஸ்ரேல் ராணுவம், காசாவில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்கும் நோக்கில் போரிட்டு வரும் நிலையில், லெபனானை சேர்ந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் நாள்தோறும் இஸ்ரேலை  தாக்கி வந்தனர்.  இந்த சூழ்நிலையில்  பல்வேறு வழிகளை கையாண்ட இஸ்ரேல் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான், காசா  மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து, இஸ்ரேல் போலீசார் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  சிசேரியாவின் வடக்கு நகரத்தில் உள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டிற்கு வெளியே உள்ள காவலர் ஷாக்கில் இன்று  இரண்டு தீப்பொறிகள் சுடப்பட்டதாகவும், அக்டோபர் மாதத்தில் ஹிஸ்புல்லா ட்ரோன் தாக்கிய நடத்திய அதே வீட்டில் இந்த தீப்பொறிகள் சுடப்பட்டதாகவும் இது குறித்து இஸ்ரேலிய போலீஸ் மற்றும் ஷின் பெட்  ஆகிய இருவரும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Prime minister of israel who survived in the thread the tension of the fire that suddenly broke out


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->