மாசித் திருவிழா : திருச்செந்தூரில் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்.!
thiruchenthur subramaniya swami temple ther festival for masi magam
கந்தா, கடம்பா, கதிர்வேலா, முத்துகுமரா என்று எல்லோராலும் அழைக்கப்படுபவர் தமிழ்க்கடவுள் முருகப்பெருமான். அறுபடை வீடு கொண்ட இவரின் இரண்டாம் படை வீடாக கருதப்படுவது திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில்.
இந்தக் கோவிலில் இந்தாண்டுக்கான மாசி திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மிகப் பிம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை என்று இரண்டு நேரங்களிலும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளித்து வீதியுலா நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் கோவில் வளாகத்தில் உள்ள கலையரங்கில் சமய சொற்பொழிவு, திருவாசகம் முற்றோதுதல், பரத நாட்டியம் மற்றும் பட்டிமன்றம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இந்த விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சி பத்தாம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு அதிகாலை ஐந்து மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் அனைத்தும் நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
English Summary
thiruchenthur subramaniya swami temple ther festival for masi magam