மாசி மாதத் திருவிழா : திருச்செந்தூரில் கொடியேற்றத்துடன் ஆரம்பம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் கடவுள் என்று எல்லோராலும் அழைக்கப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசித் திருவிழா மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாசி மாத திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 12 நாட்கள் நடைபெறும். இந்த நிலையில் இன்று கொடியேற்ற விழாவை முன்னிட்டு கோவில் அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. 

அதன் பின்னர் காலை 5 மணிக்கு கோவில் செப்பு கொடிமரத்தில் மாசித்திருவிழாவிற்கான கொடியேற்றம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வருகிற 4-ம் தேதி அதிகாலை சுவாமி சண்முகர் வெள்ளை சாத்தி கோலத்தில் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். 

இவ்விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியான பத்தாம் நாள் தேரோட்டம் வருகிற 6-ம் தேதியன்று நடைபெற உள்ளது. அன்று காலை விநாயகர், சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி நான்கு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தர உள்ளனர்.

இதையடுத்து, 7-ம் தேதி தெப்பத்திருவிழாவும் நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகித்தனர் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today flag hoisting in thiruchenthur subramaniyan temple for masi festival


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->