தினம் ஒரு திருத்தலம்.. ஐந்து தலை நாகம் குடை பிடிக்க.. சின் முத்திரை.. அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில்.! - Seithipunal
Seithipunal


இந்த கோயில் எங்கு உள்ளது?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திரிசூலம் என்னும் ஊரில் அருள்மிகு திரிசூலநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் திரிசூலம் என்னும் ஊர் உள்ளது. திரிசூலத்தில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

மூலஸ்தானத்தில் மூலவரான திரிசூலநாதர், தேஜோ மயமாக காட்சி தரும் சிவலிங்க ஸ்வரூபம் எடுத்து, ஐந்து தலை நாகம் குடை பிடிக்க, கிழக்கு பார்த்து காட்சியளிக்கிறார்.

இங்கு மூலவரின் சன்னதிக்குள், சிவன் அருகில் சொர்ணாம்பிகை இருக்கிறாள். மூலவரின் விமானம் கஜபிருஷ்டம் என அழைக்கப்படுகிறது. 

இத்தலத்தில் சீனிவாசப்பெருமாளும் காட்சி தருகிறார். வைகுண்ட ஏகாதசியின்போது சீனிவாசர் முத்தங்கி சேவையில் காட்சி தருவார்.

சிவன் கோஷ்டத்திலுள்ள விநாயகர் நாக யக்ஞோபவீத கணபதி என்றழைக்கப்படுகிறார்.

நரசிம்மரின் உக்கிரம் தணிக்க வந்த சரபேஸ்வரர் தன் சுயரூபத்துடன் ஒரு தூணில் காட்சி தருகிறார். பொதுவாக சரபேஸ்வரருக்கு சரபம் என்ற பறவையின் இறக்கை இருக்கும். ஆனால், இங்கே இறகு இல்லாத சரபேஸ்வரர் அருள்பாலிக்கிறார்.

இவர் இரண்டு முகங்களுடனும், முதல் இரு கைகளில் மான், மழு ஏந்தியும், மற்ற இரு கைகளில் நரசிம்மரை பிடித்த கோலத்திலும் உள்ளார். இத்தகைய அமைப்பில் சரபேஸ்வரரை காண்பது அபூர்வம்.

வேறென்ன சிறப்பு?

இத்தல இறைவியான பிரதான அம்பிகை திரிபுரசுந்தரி தனிச்சன்னதியில் காட்சி தருகிறாள். 

சிவன் சன்னதி கோஷ்டத்தில் 'வீராசன தட்சிணாமூர்த்தி" இடது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். பொதுவாக தட்சிணாமூர்த்திக்கு கீழேயுள்ள சீடர்கள், வணங்கியபடிதான் இருப்பர். ஆனால் இங்கு சீடர்கள் இருவர் சின் முத்திரை காட்டியபடி இருக்கின்றனர்.

தனிச்சன்னதியிலுள்ள மார்க்கண்டேஸ்வரர் பதினாறு பட்டை லிங்கம் 'சோடச லிங்க" வடிவில் காட்சி தருகிறார்.

காசி விஸ்வநாதர், விசாலாட்சி, வள்ளி, தெய்வானையுடன் முருகன், ஐயப்பன், ஆதிசங்கரர் ஆகியோரின் சன்னதிகளும் அமைந்துள்ளன.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், சிவராத்திரி, பங்குனி உத்திரத்தன்று திருக்கல்யாணம் ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

கல்வியில் சிறக்க திரிசூலநாதர் மற்றும் வீராசன தட்சிணாமூர்த்தியிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இக்கோயிலில் வேண்டுதல்கள் நிறைவேறியவுடன் சுவாமிக்கு வஸ்திரம் சாற்றியும், விசேஷ அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today special thirisoolanathar temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->