நாளை வைகாசி விசாகம்... விரதம் இருப்பவர்களின் கவனத்திற்கு.! வைகாசி விசாகம்.! - Seithipunal
Seithipunal


வைகாசி விசாகம் :

வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதாரம் செய்த நாளாகும். வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர நாளே வைகாசி விசாகம் ஆகும்.

வைகாசி விசாகத்தன்று விரமிருந்து முருகப்பெருமானை வணங்கினால் சகல சௌபாக்கியங்களும் நம்மை வந்து சேரும். இப்பொழுது முருகப்பெருமானுக்கு வைகாசி விசாகத்தன்று எவ்வாறு விரதம் இருக்க வேண்டும்? மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை பற்றி பார்க்கலாம் வாங்க...

விரதமுறை :

வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை 4.30 மணியளவில் இருந்து 6 மணிக்குள் எழுந்து குளித்துமுடித்து அன்று நாள் முழுவதும் விரதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஒருவேளை உணவு உட்கொள்ளலாம். மற்றவர்கள் பால், கனி வகைகளை சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.

விரதம் இருக்கும் பொழுது முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான சரவணபவ என்பதை சொல்லலாம். திருப்புகழ் மற்றும் கந்தசஷ்டி கவசம் படிக்கலாம்.

அதுமட்டுமின்றி, முருகன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுவது நல்லது. முருகன் கோயில் அமைந்துள்ள மலையை சுற்றி கிரிவலம் வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.

பலன்கள் :

விசாகம் ஞானத்திற்குரிய நட்சத்திரம். வைகாசி விசாகத்தன்று விரதம் இருந்து பால் குடம், பால் காவடி எடுத்து முருகப்பெருமானை வணங்கினால் ஞானமும், கல்வியும் பெருகும். துர்தேவதைகளின் கொடுமைகள் நீங்கும்.

குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பவர்கள் வைகாசி விசாகம் அன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபட்டால் குழந்தை பாக்கியம் உடனே கிடைக்கும்.

வைகாசி விசாகத் திருநாளன்று ஒருவேளை மட்டுமே உணவு உட்கொண்டு விரதம் இருந்து முருகப்பெருமானுக்கு பால் காவடி எடுத்து பாலாபிஷேகம் செய்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அனைத்து செல்வங்களும் கிடைக்கும். பகை விலகும். துன்பம் நீங்கும்.

மேலும் இந்நாளில் குடை, செருப்பு, மோர், பானகம், தயிர் சாதம் முதலியவற்றை ஏழைகளுக்கு தானம் செய்தால் திருமணம் கைகூடும். குழந்தைப்பேறு உண்டாகும். குலம் தழைத்து ஓங்கும். ஆபத்துகள் அகலும்.

'இந்த நன்னாளில் முருகர் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு இறையருளை பெற்றிடுங்கள்..!"


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomorrow vaigasi visagam 2022


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->