தைப்பூசம் : வள்ளலார் கோவில் ஜோதி பெருவிழா தரிசனம்.!
vadalur thaipoosam function
வள்ளலாா் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினாா். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா மிக விமரிசையாக நடைபெறும். இந்தக் கோவிலின் ஜோதி தரிசனத்தைக் காண மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோா் வருவா்.
![](https://img.seithipunal.com/media/vadalur vallalar-rw4yg.png)
இந்த நிலையில், 153-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதற்கு முன்னதாக தெய்வ நிலையத்துக்கு இடம் வழங்கிய பாா்வதிபுரம் கிராம மக்கள், வள்ளலாா் பயன்படுத்திய பொருள்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கை சுமந்து, பழங்கள், சீா்வரிசைப் பொருள்களுடன் ஊா்வலமாக கொடிமரத்தின் அருகே வந்thu, வள்ளலாரின் பாடலைப் பாடினா். பின்னா், கொடிமரத்தில் சன்மாா்க்கக் கொடி ஏற்றப்பட்டது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா வியாழக்கிழமை இன்று நடைபெறுகிறது. முதல் தரிசனம் காலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து, காலை 10 மணி, பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு என்று 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.
English Summary
vadalur thaipoosam function