விருட்ச சாஸ்திரம் : வாகை மரத்தை வீட்டில் வளர்க்கலாமா.? - Seithipunal
Seithipunal


வாகை மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

வாகை அல்லது தூங்குமூஞ்சி மரம் என அழைக்கப்படும் இம்மரம் தெற்காசியாவைப் பூர்வீகமாக கொண்ட மரமாகும். 

இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. வாகை மரம் வலுவான மரமாகவும், தமிழர்கள் வாழும் பகுதிகளில் காணப்படும் பழமையான மரங்களுக்குள் ஒன்றாகவும் கருதப்படுகின்றது.

வாகை மரம் மற்ற மரங்களைப் போல் இல்லாமல் இரவிலும் ஆக்ஸிஜனை வெளியிடும். 15மீ வளர்ந்த மரம் ஆண்டொன்றுக்கு 28.5 டன் கார்பன்-டை-ஆக்ஸைடை உட்கொள்வதாகக் கூறப்படுகிறது. இது அதிகபட்சமாக 25மீ உயரமும், 40மீ சுற்றளவும் வளரக்கூடியது.

கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோலக் காணப்படும். இது பலத்தண்டுகளையுடையதாகவும், பரந்து வளரக்கூடியதாகவும் உள்ளது. 

அந்திசாயும் வேளையில் இலைகளைக் கீழ் நோக்கிக் தொங்கவிட்டு, தேக்கியதில் மீதமிருக்கும் நீர்த்துளிகளை, மழைச்சாரலைப் போலத் தனது எல்லைக்குள் தெளித்து குளிர்வித்து விடும். இச்சிறப்புத் திறமை இந்த மரத்துக்கு மட்டுமே உண்டு. எனவே இதற்குப் பொறுத்தமாக 'ரெயின் ட்ரீ - மழை மரம்" என்று பெயர்.

 முருங்கை இலையைப் போன்ற இலைகளுடன், சீகைக்காயைப் போன்ற காய்களைக் கொண்டிருக்கும். இலை தொடக்கத்தில் கரும்பச்சையிலும் இரவு நேரங்களில் மூடிக் கொள்ளும் பண்புடையதாகவும், முதிர்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் காம்புகளுடன் இறுகிய அமைப்பிலும் காணப்படும். 

இளமஞ்சள்ஃவெண்நிறம் உடைய கொத்தான மகரந்தத் தாள்களை உள்ளடக்கிய மணமிக்க பூக்களை உடையது. இந்த மரம், மருத்துவத்திலும் முக்கியப் பங்காற்றுகிறது. 

இலைகளிலும், காய்களிலும் நீர், புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப் பொருள், உலோக உப்புகள் அடங்கியுள்ளன. இலைகளை உலர்த்தினால் 4 சதவீத அளவில் நைட்ரஜன் கிடைக்கும். இதன் காய்களை இடித்துத் தூளாக்கி, கால்நடைகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம். மரப்பட்டையில் ஆல்கலாய்டுகள் உள்ளன. 

இதன் இலை ஆடு, மாடுகளுக்குத் தீவனமாக உதவுகிறது, நிலத்திற்கு தழையுரமாகிறது. வீட்டுக்குத் தேவையான தூண், கதவு, ஜன்னல், உத்திரம், மரச்சாமன்கள், மரச் செக்குகள், மேஜை, நாற்காலி செய்யவும், காகிதம் தயாரிக்கவும் மற்றும் ஏழை மக்கள் அடுப்பெரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. மண்ணரிப்பையும் தடுக்கிறது. இம்மரத்தின் பிசினிலிருந்து கோந்து தயாரிக்கப்படுகிறது. 

வாகை மரம் மன்னர்கள் காலத்தில், வெற்றியின் அடையாளமாக இம்மரத்தின் மலர்களை தான் சூடுவார்கள். அதனால் தான் 'வெற்றி வாகை" என்ற சொல்லே உருவானது. வெற்றியின் அடையாளமான இம்மரம், விவசாயிகளையும் வருமானத்தில் வெற்றிபெற வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

வீட்டில் வாகை மரத்தை வளர்க்கலாமா?

இம்மரத்தை வேலியோரங்கள், காட்டோடைகள், காலியாக உள்ள இடங்களில் ஒன்றிரண்டு மரங்களை நட்டு வைப்பது நலம். மண்கண்டம் குறைவாக உள்ள நிலங்கள், உவர், அழல் நிலங்கள், உப்புக்காற்று உள்ள கடற்கரை ஓரங்கள், சுண்ணாம்புச் சத்து நிறைந்த நிலம் என அனைத்து வகை நிலங்களிலும் வளரும்.

வீட்டின் எந்த திசையில் வாகை மரத்தை வளர்க்கலாம்?

வீட்டின் தென்மேற்கு பகுதியில் வளர்ப்பது சிறப்பானது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vagai tree to plant in house


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->