எந்த நட்சத்திரத்தில் வாகனம் வாங்கினால் நல்லது.!
VANDI VANGA SWATHI NATCHATHIRAM
நமது முன்னோர்கள் ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நட்சத்திரங்களை வகுத்து வைத்துள்ளனர். அவை யாதெனில் எல்லா நட்சத்திரங்களிலும், எல்லா காரியங்களையும் செய்வது என்பது உசிதமானதல்ல. சில காரியங்களுக்கு இந்த நட்சத்திரங்கள் மட்டுமே உகந்தது என்று நம் முன்னோர்கள் பகுத்து அதை நமக்கு அளித்தும் சென்றுள்ளனர்.
எந்த ஒரு காரியமும் செய்வதற்கு முன்பாக அன்றைய தினத்தில் உள்ள நட்சத்திரங்களை பார்த்து, நாம் செய்யும் காரியத்திற்கு இந்த நட்சத்திரம் ஏதாவது ஒரு வகையில் ஆதரவாக இருக்கின்றதா? என்று ஆராய்ந்து செய்வது, செய்ய நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த பலன்களை நாம் அடைய உதவும்.
அந்த வகையில் இன்று நாம் சுவாதி நட்சத்திரத்தன்று என்னென்ன காரியங்கள் செய்யலாம்? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
மொட்டை அடிக்க நல்ல நாள்.
குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்கு ஏற்ற நாள்.
விதை விதைக்க சிறந்த நாள்.
தானியம் வாங்க உகந்த நாள்.
திருமணம் செய்ய சிறப்பான நாள்.
புதியதாக சமையல் தொழில் தொடங்க நல்ல நாள்.
மாங்கல்யம் செய்ய ஏற்ற நாள்.
வீடு, வாகனம் வாங்க சிறந்த நாள்.
ஆயுத பயிற்சி மேற்கொள்ள உகந்த நாள்.
நோயாளிகளை குளிக்க வைக்க சிறப்பான நாள்.
சிகிக்சை மேற்கொள்ள நல்ல நாள்.
அன்னதானம் செய்ய ஏற்ற நாள்.
கடல் மார்க்க பயணங்களை மேற்கொள்ள சிறந்த நாள்.
புதிய ஆடை, ஆபரணம் அணிய உகந்த நாள்.
கல்வி, ஜோதிடம் மற்றும் மருத்துவம் கற்க சிறப்பான நாள்.
மல்யுத்தம் போட்டிகளில் பங்கேற்க நல்ல நாள்.
English Summary
VANDI VANGA SWATHI NATCHATHIRAM