சீட்டு பணம் கேட்டது குற்றமா? இளம்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த கும்பல்! - Seithipunal
Seithipunal


 5 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து இளம் பெண்ணுக்கு மயக்க மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இதுதொடர்பாக 6 பேர் மீது வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சின்னகாஞ்சீபுரத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர், தனது நிலத்தை விற்று செய்யாறு அருகே சீட்டு நிறுவனம் நடத்தி வரும் அல்தாப் தாசின் என்பவரிடம் ரூ.15 லட்சத்துக்கு சீட்டு கட்டி வந்தார். மேலும் அந்த நிறுவனத்தில் தனக்கு தெரிந்தவர்களையும் சேர்த்து ரூ.1 கோடியே 75 லட்சத்துக்கு சீட்டு கட்டி உள்ளார்.

அதனை தொடர்ந்து இளம்பெண் சேர்த்து விட்ட நபர்களுக்கு ரூ.40 லட்சத்தை அந்த நிறுவனத்தினர் கொடுத்துள்ளனர். மீதி பணத்தை அந்த பெண் கேட்டபோது  பணத்தை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

 இந்த நிலையில் சீட்டு நிறுவனம் நடத்தி வரும் அல்தாப் தாசின் பணத்தை கேட்டுள்ளார்,அப்போது பணத்தை நேரில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என கூறியுள்ளாரஇதை நம்பி அந்த பெண் பின்னர் வேலூர் வந்த பெண்ணிடம், பொது இடத்தில் அதிக தொகை கொடுத்தால் பிரச்சினை வரும். என்பதால் விடுதிக்கு வாருங்கள் என்று தெரிவித்துள்ளார். இதை நம்பிய அந்த பெண்ணும், அவரது தாயாரும் விடுதிக்கு சென்றனர். அங்கிருந்த 5 பேர் கொண்ட கும்பல் சேர்ந்து பணத்தை கொடுக்க முடியாது என்றும், பணம் கேட்டால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர்.

மேலும் இளம் பெண்ணின் தாயை ஒருவர் வேறு ஒரு இடத்துக்கு அழைத்து சென்றிந்த நிலையில் நேரத்தில் இளம்பெண்ணுக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து அல்தாப் தாசின், மகேஷ், ராஜ்குமார் ஆகியோர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் அந்த பெண்ணிடம், உன்னை பாலியல் பலாத்காரம் செய்தும், ஆடைகளை கழற்றி நிர்வாணமாகவும் வீடியோ எடுத்து வைத்துள்ளோம். இதை வெளியில் சொன்னால் இணையதளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த பெண் கடந்த மாதம் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளித்திருந்தார். இந்நிலையில் இந்த புகார் தொடர்பாக 3 பெண்கள் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is it a crime to ask for money? Teenage girl gang-raped!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->