''ஆன்மிக ரகசியங்கள்''- வீட்டில் தங்க நகைகள், புடவைகள் சேர... மறந்தும் பெண்கள் இதனை செய்யக்கூடாது!  - Seithipunal
Seithipunal


பொதுவாக பெண்கள் அனைவரும் தங்க நகை மற்றும் நல்ல புடவை அணிய வேண்டும் என விரும்புகின்றனர். தங்க நகைகள் அணியும் பொழுது சமூகம் மற்றும் உறவினர்கள் மத்தியில் மதிப்பு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. 

தங்கம் அணிவது உடல் அழகிற்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. தங்கம் ஒருவரது வீட்டில் எளிதாக தங்கி விடுவதில்லை. தங்க நகை அதிகம் சேரவும் அடகு வைத்துள்ள தங்கைகளை தங்க நகைகளை எளிதில் திருப்பவும் சில ஆன்மீக பரிகாரங்கள் உள்ளது. அவற்றை இந்த பதிவில் பார்க்கலாம். 

* பொதுவாக பெண்களுக்கு நகைகள், புடவைகள் என வீட்டில் குவிந்து கிடந்தாலும் போதும் என்ற மனம் வராது. இது இயற்கையான குணம். இது போன்ற பெண்களுக்கு பிடித்தமான நகை, புடவை சேராமல் போவதற்கு பெண்கள் செய்யும் சில தவறுகள் காரணமாக உள்ளது. 

* பொதுவாக பெண்கள் சுப காரியங்களுக்கு செல்லும் போது உடுத்துச் செல்லக்கூடிய புடவையை மீண்டும் வீட்டிற்கு வந்து அதனை துவைக்காமல் காய போட்டு விட்டு பின்னர் மடித்து வைத்து விடுவார்கள். இதுதான் வீட்டில் புடவைகள் தங்காமல் போவதற்கான முதல் காரணம். 

* இதுபோல் புடவையை துவைக்காமல் பீரோவில் சேர்த்து வைத்தால் தோஷம் வந்து சேரும். இதனால் எந்த துணியாக இருந்தாலும் அதனை நன்றாக அலசி விட்டு தான் உடுத்த வேண்டும். 

* பட்டுப் புடவையாக இருந்தாலும் தண்ணீரால் துடைத்து விட்டு உடுத்த வேண்டும். அதேபோல் தங்க நகைகளையும் அணிந்து விட்டு மீண்டும் அப்படியே பீரோவில் கழட்டி வைக்க கூடாது. அணிந்திருக்கும் நகைகளை மஞ்சள் கலந்த தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்து பின்னர் துடைத்துவிட்டு பீரோவில் எடுத்து வைக்க வேண்டும். 

* இதேபோல் அடமானத்தில் உள்ள நகைகளையும் மீட்டு வந்த பிறகு அப்படியே வைக்காமல் உப்பு கலந்த நீர் அல்லது மஞ்சள் கலந்த நீரில் கழுவி வைக்க வேண்டும். ஏனென்றால் அடமானத்திற்கு சென்ற நகையும் தோஷம் தான். அதனை அப்படியே வைத்து விட்டால் தோஷமான நகையாக மாறிவிடும். 

* இதனால் நகை தங்காமல் போய்விடும். நாம் வெளியில் செல்லும்போது நம்மை பார்க்கும் ஒவ்வொரு கண்ணும் ஒரே மாதிரி இருப்பதில்லை. அந்த பார்வை நாம் அணிந்திருக்கும் நகை, புடவை மீதுபட்டு தோஷமாக மாறும். 

* அதுமட்டுமல்லாமல் நாம் பயன்படுத்திய நகை மற்றும் புடவையை அப்படியே வைக்கும் பொழுது சுக்கிர பகவானின் அனுகிரகம் நமக்கு கிடைக்காமல் போய்விடும். சுக்கிர பகவானின் அருள் நமக்கு கிடைக்கவில்லை என்றால் நகை, புடவை போன்ற பொருட்கள் நம்மை விட்டு விலகும். 

* நகைகளில் தங்கம், வெள்ளி இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைக்காமல் தனித்தனியாக தான் வைக்க வேண்டும் அது மட்டுமல்லாமல் தங்க நகைகளை சந்தன பெட்டிகளில் தான் வைக்க வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veetil thangam thanguvatharku anmika rakaciyankal 


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->