புதன்கிழமை... வீட்டில் செய்ய வேண்டியவை என்னென்ன? பார்க்கலாம் வாங்க.! - Seithipunal
Seithipunal


புதன்கிழமை அன்று செய்ய வேண்டியவை:

நம்முடைய வீடுகளில் நாம் எல்லா வேலைகளையும், எல்லா நாட்களிலும் செய்தாலும், சில தினங்களில், சில குறிப்பிட்ட வேலைகளை செய்துவந்தால் நமக்கு நன்மை நடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் புதன்கிழமை அன்று அவரவர் வீட்டில் பெண்கள் இந்த வழிமுறைகளை கடைபிடித்தால் நல்லது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம். 

அஞ்சறை பெட்டி :

பொதுவாக சமையல் அறையில் பெண்கள் முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் அஞ்சறை பெட்டி. இந்த அஞ்சறை பெட்டியில் வாரம் ஒருமுறை அதாவது புதன்கிழமை அன்று பொருட்களை நிரப்பி வைப்பது மிகவும் நல்லது. 

அஞ்சறை பெட்டியில் உள்ள பொருட்கள் என்றுமே நிறைவாக இருக்க வேண்டும். இப்படி இருக்க அந்த பொருட்களை புதன்கிழமை அன்று அஞ்சறை பெட்டியில் சேமித்து வைக்கும் போது நம் வீட்டில் செல்வமும் சேரும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. 

சமையல் எண்ணெய், மருந்து :

சமைக்க தேவைப்படும் எண்ணெயை புதன்கிழமையில் வாங்கினால் வீட்டிற்கு அதிர்ஷ்டம் தேடி வரும். உடல்நிலை சரியில்லாதவர்கள் மருந்து வாங்க வேண்டுமென்றாலும், புதன்கிழமைகளில் வாங்கலாம். ஆனால் தயவு செய்து எண்ணெயையும், மருந்தையும் ஒன்றாக சேர்த்து வாங்காதீர்கள். ஒரு புதன்கிழமை மருந்து வாங்குங்கள். அடுத்த புதன்கிழமை எண்ணெய் வாங்குங்கள். 

அப்படி புதன்கிழமையன்று நீங்கள் மருந்து வாங்கும் பட்சத்தில் அந்த நோய்க்கான தீர்வு கூடிய விரைவில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. இதுவே தீராத நோயாக இருந்தாலும், அதில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

எண்ணெய் குளியல் :

பெண்கள் புதன்கிழமை அன்று மறக்காமல் எண்ணெய் தேய்த்து குளிப்பது அவசியம். இது உங்களுடைய ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. குறிப்பாக புதன்கிழமை அன்று எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது முக அழகும், அக அழகும் அதிகரிக்கும். 

பெண்களுக்கு முக அழகு எவ்வளவு தேவையோ, அதைவிட அதிகம் தேவை அக அழகு. அதாவது மன சுத்தம், மனத்தூய்மை, சுயநலமற்ற மனது. இதனால்தான் மேற்குறிப்பிட்டுள்ள கடமைகளை எல்லாம் பெண்கள் கையில் கொடுத்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். 

புதன்கிழமை அன்று, உங்களுக்கு திருமண நாளோ அல்லது பிறந்த நாளோ அல்லது அமாவாசையோ இதுபோன்ற குறிப்பிட்ட ஏதாவது தினங்கள் வந்தால் மட்டும் அந்த தினத்தில் எண்ணெய் வைத்து குளிப்பதை தவிர்த்து கொள்ளுங்கள். சில விஷயங்களை தொடர்ந்து நாம் செய்து வருவதன் மூலம் நம்முடைய வீடும் செழிப்பாக இருக்கும். குடும்பம் சுபிட்சமாக இருக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

wednesday special thing for women


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->