விருட்ச சாஸ்திரம் : செண்பக மரத்தை வீட்டில் வளர்க்கலாமா? - Seithipunal
Seithipunal


விருட்ச சாஸ்திரம் : செண்பக மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

செண்பக மரத்தின் தாவரவியல் பெயர் மைக்கேலிய செம்பகா என்பதாகும். இது மேக்னோலியேசி குடும்பத்தைச் சேர்ந்தது.

செண்பக மரம் மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் அதிகமாக வளர்ந்து காணப்படுகிறது. இதனுடைய தாயகம் இந்தியா. பின் மற்ற நாடுகளான இந்தோனேசியா, மியான்மார், கலிஃபோர்னியா, மலேசியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு பரவிற்று. 

சாதாரணமாக செண்பக மரங்கள் முப்பது அடிக்கும் உயர்வாக வளரக்கூடியது. பருமன் 35 மீட்டர், அடிமரம் 20 மீட்டர் அளவில் இருக்கும். இதன் இலை 20-25 செ.மீ நீளமும், 4 செ.மீ அகலமும் கொண்டிருக்கும்.

காய்கள் கொத்துக் கொத்தாக இருக்கும். பழங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். பழங்களை பறவைகள் விரும்பி சாப்பிடும்.

இந்த மரம் வளரும் இடங்கள் மிகவும் செழிப்பாக இருக்கும், நீர் வளமும், மழை வளமும் அதிக அளவில் இருக்கும். 

மேற்கு தொடர்ச்சி மலை காடுகளில் தானாகவே வளரும் செண்பக மரம், மேல்நோக்கி குவிந்த இலைகளையும், நறுமணமுள்ள மஞ்சள் மற்றும் வெள்ளை நிறமுள்ள மலர்களையும் உடையது.

செண்பக பூக்களில் இருந்து கிடைக்கும் கெட்டியான பசை, வேதியியல் பொருட்களால் கரைத்து எடுக்கப்பட்டு, பலவித வாசனை திரவியங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

செண்பக மரம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைகள் நீண்டு வளரக்கூடியவை. இலைகளின் மேற்புறம் பசுமையாகவும் பின்புறம் ரோமங்கள் நிறைந்திருப்பதாலும் காற்றில் கலந்திருக்கும் தூசுகளை அகற்றும் தன்மை படைத்தவை. 

மஞ்சள் நிற மலர்களின் வாசனை காற்றோடு காற்றாகக் கலந்து, சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்துவதோடு ரம்மியமான ஒரு சூழலை உருவாக்கும். இதை சுவாசிப்பதன் மூலம் நம்மை மெய்மறக்கச் செய்யும்.

மலருக்காக வீடுகள் மற்றும் கோவில் நந்தவனங்களில் வளர்க்கப்படுகின்றன. இதன் இலை, பூ, விதை, வேர், பட்டை ஆகியவற்றுக்கு மருத்துவக்குணங்கள் உள்ளன.

செண்பக மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

சாலையின் இருபுறம், வீட்டு முகப்பு, கோவில், குளக்கரை மற்றும் பொது இடங்களில் செண்பக மரங்கள் வளர்க்கப்படுகின்றன. 

இரண்டு செண்பக மரங்களை வீட்டில் வளர்த்தால் சொர்க்கத்தை காணலாம் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 

மேலும், சௌபாக்ய விருட்சம் என்ற சாஸ்திரப் பெயரைக் கொண்டுள்ள இந்த மரத்தை வீட்டில் வளர்த்து செவ்வாய்க்கிழமைகளில் வழிபட்டு வந்தால் வளம் சேரும் என்பது ஐதீகம்.

செண்பக மரத்தை நம் வீட்டில் வைத்து வளர்த்தோம் என்றால் அது நமக்கு அதிர்ஷ்டத்தை தரும். 

செண்பக மரத்தை வீட்டின் எந்த திசையில் வளர்க்கலாம்?

செண்பக மரத்தை தென்மேற்கு, மேற்கு போன்ற திசைகளில் வளர்க்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Which side plant in senbaga tree


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->