திருமணம், சுப நிகழ்ச்சிகளில் அரிசியில் அட்சதை போடுவதற்கு பின் இப்படி ஒரு விஷயமா.?!
Why atchathai in tamil marriage
திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளிலும் மலர் தூவி அர்ச்சனை போடுவதை விட அரிசியுடன் மஞ்சள் மற்றும் நெய் சேர்த்து ஆசிர்வாதம் வழங்கும் அச்சதைக்கு மிகுந்த சிறப்பு உண்டு.
இந்த அர்ச்சனை நிலத்திற்கு அடியில் விளையும் மஞ்சள் மற்றும் நிலத்திற்கு மேலே விளையும் நெல் மற்றும் எந்தவித அசுத்தமும் இல்லாத பசு நெய் ஆகியவற்றை கலந்து உருவாக்கப்படுவதால் இது மிகவும் தெய்வீக தன்மை மற்றும் புனிதம் கொண்டதாக கருதப்படுகிறது.
இந்த அரிசியை கையில் வைத்து கொடுக்காமல் தட்டில் வைத்து அனைவருக்கும் கொடுப்பார்கள். இது சக்தி மற்றும் உணர்வையும், கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது.
பெரியவர்களின் மனதில் ஏதாவது சங்கடங்கள் இருந்தாலும் கூட இந்த அச்சகையை அவர்கள் கையில் எடுத்தவுடன் அவர்களிடம் ஒரு நேர்மறை எண்ணம் தோன்றி விடும். அப்போது நல்ல மனதுடன் அவர்கள் திருமண தம்பதிகளை வாழ்த்துவதால் உங்களின் வாழ்வு சுபிட்சமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
பலரும் இந்த அச்சகையை தூவி வாழ்த்தா பல இடங்களில் இருந்தவாறு தூக்கி எறிவதை நாம் பார்க்கலாம். இது இயற்கையை அவமதிக்கும் செயலாகும். இதை ஒருபோதும் செய்யக்கூடாது.
English Summary
Why atchathai in tamil marriage