17வது ஐபில் போட்டி "பஞ்சாப் vs குஜராத்"..நடந்தது என்ன?
17th IPL match "Punjab vs Gujarat"..what happened?
அமதாபாத்த்தில் நேற்று 17வது ஐபில் போட்டியானது நடைபெற்ற்றது .அதில், பஞ்சாப் அணியும் குஜராத் அணியும் மோதியது.
டாஸ்ஸை வென்ற பஞ்சாப் அணி கேப்டன் தவான் பீல்டிங்கை தேர்வு செய்தார்.அதனால்,முதலில் பேட்டிங் ஆடிய குஜராத் அணி 4 விக்கேட் இழந்து 199 ரன் எடுத்தது.குஜராத் அணியின் கேப்டன் கில் அதிரடியாக விளையாடி 89 ரன் குவித்தார்.சாஹா 11 ரன் ,வில்லியம்சன் 26 ரன் , சுதர்சன் 33 ரன் , விஜய் சங்கர் 8 ரன் , அதிரடிஆட்டகாரர் ராகுல் திவாட்டியா 8 பந்துகளில் 23 ரன்களை குவித்தார். ஆட்டமுடிவில் குஜராத்அணி மொத்தம் 199 ரன் எடுத்து பஞ்சாப் அணிக்கு 200 ரன்னை இலக்காக நிர்ணயம் செய்தது.
200 ரன் இலக்கை நோக்கி களமிறங்கியது பஞ்சாப் அணி .முதல் ஓவரிலே தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார் பஞ்சாப் அணி கேப்டன் தவான்.ஜானி பேர்ஸ்டோ 22 ரன்னுக்கு அவுட் ஆகினார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சாம் 5ரன்னில் ஆட்டமிந்தார்.
ஆறாவதாக களமிறங்கிய ஷசாங் சிங் , இம்பேக்ட் வீரராக வந்த அஷுதோஸ் ஷர்மாவும் இணைந்து அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷசாங் சிங் 29 பந்துகளில் 69 ரன்களை குவித்தார். பஞ்சாப் வெற்றிக்கு கடைசி ஓவரில் 7 ரன்கள் தேவைப்பட்டது.ஒரு பந்தை மீதம் வைத்து 19.5ஓவர்களில் 200 ரன்களை எடுத்து வெற்றிப்பெற்றது பஞ்சாப் அணி.
English Summary
17th IPL match "Punjab vs Gujarat"..what happened?