2021 திரும்பி பார்ப்போம்..தடைகளை சாதனைகளாக மாற்றி..விளையாட்டுத்துறையில் சாதித்தவர்கள்..யார்? - Seithipunal
Seithipunal


டோக்கியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் ஆசிய சாதனை படைத்ததுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில், 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் மணீஷ் நர்வால் தங்கமும், மற்றொரு இந்திய வீரர் சிங்ராஜ் அதானா வெள்ளியும் வென்றனர்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் தங்கப்பதக்கம் வென்றார்.

 டோக்கியோ பாரா ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர் பிரமோத் பகத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கம்பு ஊன்றி தாண்டுதல் போட்டியில் தமிழக வீராங்கனை பவித்ரா வெங்கடேஷ் முதலிடம் பிடித்தார்.

பிசிசிஐ ஜூனியர் தேர்வுக்குழு தலைவராக தமிழக முன்னாள் வீரர் எஸ்.ஷரத் தேர்வு செய்யப்பட்டார்.

 தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பம் மத்திய அரசின் 'கேலோ இந்தியா" திட்டத்தின்கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அறிக்கை வெளியிட்டார்.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதமடித்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை ஸ்மிரிதி மந்தனா படைத்தார்.

 ஜூனியர் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மானு பாக்கர் தங்கப்பதக்கம் வென்றார். இஷா சிங், கேன்மட் செகான், ஆடவர் பிரிவில் ருத்ராங்ஷ் பட்டீல் ஆகியோர் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் தமிழக வீரர் சுரேஷ் தங்கப்பதக்கம் வென்றார்.

 மொராக்கோவில் சஹாரா பாலைவனத்தில் நடந்த மாரத்தான் போட்டியின் 3ஆம் சுற்றில் மொராக்கோவின் மொஹமத் எல் மொரபிட்டி முதலிடம் பிடித்தார்.

இத்தாலியில் நடைபெற்ற யேவழைளெ டுநயபரந கால்பந்து இறுதி போட்டியில் பிரான்ஸ் அணி, ஸ்பெயினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

கிரெம்ளின் கோப்பை டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் எஸ்டோனியா வீராங்கனை அனெட் கொண்டவெயிட் சாம்பியன் பட்டம் வென்றார்.

 பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் இங்கிலாந்து வீரர் கேமரூன் நோரி, ஸ்பெயின் வீராங்கனை பாலா படோசா ஆகியோர் 'சாம்பியன்" பட்டம் வென்று சாதனை படைத்தனர்.

தெற்காசிய நாடுகளுக்கு இடையிலான கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2021 sports records


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->